எபிக்கியூரிய மெய்யியலாளர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இது ஓரளவு காலநிரல்படியமைந்த எபிக்கியூரிய மெய்யியலாளர்கள் பட்டியலாகும்.

கி.மு 3ஆம் நூற்றாண்டு
எபிக்கியூரசு கி.மு 341-270 எபிக்கியூரிய மெய்யியல் பள்ளியை நிறுவியவர்.
இலாம்ப்சாக்கசுவின் பாலியேனசு அண். கி.மு 345-அண். கி.மு 285 கணிதவியலாளர், எபிக்கியூரசுவின் நண்பர்.
மெட்ரோடோரசு, இலாம்ப்சாக்கசு கி.மு 331-278 எபிக்கியூரசுவின் நெருங்கிய நண்பர்.
இலியாண்டியோன் fl. கி.மு 300 தியோபிரேசுடசுவைக் கண்டித்த மெய்யியலாளர் .
இலாம்ப்சாக்கசுவின் திமோகிரேட்டசு fl. கி.மு 300 மெட்ரோடோரசுவின் தம்பி, எபிக்கியூரிய கொள்கையாளர்.
இலாம்ப்சாக்கசுவின் இலியாண்டியசு அண். கி.மு 300 எபிக்கியூரசுவின் மாணவர்.
இலாம்ப்சாக்கசுவின் தெமிசுட்டா அண். கி.மு 300 எபிக்கியூரசுவின் மாணவர்.
கார்னீசுகசு அண். கி.மு 300 நட்பு பற்றி நூலெழுதிய எபிக்கியூரியர்.
இலாம்ப்சாக்கசுவின் இடோமேனியசு அண். 325-அண். கி.மு 250 எபிக்கியூரசுவின் மாணவரும் நண்பரும். பெயர்பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
கெமார்க்கசு அன். 325-அண். கி.மு 250 எபிக்கியூரியப் பள்ளியின் இரண்டாம் தலைவர்.
பிதோகிளெசு அண். 323-அண். கி.மு 250 எபிக்கியூரசுவின் மாணவர்.
இலாம்ப்சாக்கசுவின் கொலோடெசு அண். 320-அண். கி.மு 250 எபிக்கியூரசுவின் நண்பர்.
பாலிசுடிராட்டசு அண். கி.மு 290-219 எபிக்கியூரியப் பள்ளியின் மூன்றாம் தலைவர்.
இலாம்திராயின் டையோனிசியசு அண். கி.மு 275-205 எபிக்கியூரியப் பள்ளியின் நான்காம் தலைவர்.
பேசில்லிடெசு அண். 250-அண். கி.மு 175 எபிக்கியூரியப் பள்ளியின் ஐந்தாம் தலைவர்.
கி.மு2ஆம் நூற்றாண்டு
இலாவோடிசியாவின் பிலோனிடெசு அண். 200-அண். கி.மு 130 எபிக்கியூரிய மெய்யியலாளர், சிலியூசிடு நீதிமன்றத்தில் வாழ்ந்தவர்.
தெசுபிசு fl. கி.மு 150 பிலோனிடெசுவின் ஆசிரியர்
தார்சசின் டையோஜீனெசு fl. கி.மு 150 எபிக்கியூரிய மெய்யியலாளர், எழுத்தாளர்.
செலியூசியாவின் டையோஜீனெசு fl. கி.மு 150 எபிக்கியூரிய மெய்யியலாளர், சிரியாவின் நீதிமன்றத்தில் வாழ்ந்தவர்.
அல்காயசு, பிலிசுகசு fl. கி.மு 150 கி.மு 173 அல்லது கி.மு 154இல் உரோமில் இருந்து வெளியேற்றப்பட்ட எபிக்கியூரிய மெய்யியலாளர்கள்.
அப்பொல்லோடோரசு fl. கி.மு 125 எபிக்கியூரியப் பள்ளியின் தலைவர், சீடோனின் சீனோ ஆசிரியர்.
டெமெட்ரியசு இலாக்கோன் அண். 150-அண். கி.மு 75 எபிக்கியூரிய மெய்யியலாளர், எழுத்தாளர்.
சீடோனின் சீனோ அண். 150-அண். கி.மு 75 எபிக்கியூரிய மெய்யியலாளர், பிலோடெமசுவின் ஆசிரியர்.
கையசு அமாஃபினியசு fl. கி.மு 125. உரோமில் எபிக்கியுரியத்தை அறிமுகப்படுத்திய எபிக்கியூரிய மெய்யியலாளர்.
டிட்டசு அல்புசியசு fl. கி.மு 105 சொற்பொழிவாளர், அரசியலாளர்.
கி.மு முதல் நூற்றாண்டு
ராபிரியசு fl. 100 BCE. இலத்தின மொழியில் எபிக்கியூரியப் பனுவல்களை எழுதியவர்
பேயட்ரசு 138-கி.மு 70 எபிக்கியூரியப் பள்ளியின் தலைவர்.
பிலோடெமசு அண். 110-அண். கி.மு 40 பாப்பிரி மாளிகையில் கிடைத்த நூல்களை எழுதிய எபிக்கியூரிய மெய்யியலாளர்.
உலூக்கிரேட்டியசு அண். 95-அண். கி.மு 55 De rerum natura எனும், அதாவது இயற்கை இயல்புகள் எனும், அறிவியல் கவிதையை எழுதிய எபிக்கியூரிய மெய்யியலாளர்
பாட்ரோ fl. கி.மு 70 எபிக்கியூரியப் பள்ளியின் தலைவர்.
ஒரேசு கி.மு 65 – கி.மு 8 carpe diem எனும் முழக்கமிட்டஎபிக்கியூரியர். இதன் பொருள் இன்றே முடி என்பதாகும்.
காட்டியசு fl. கி.மு 50 இலத்தீன நூல்களை எழுதிய எபிக்கியூரிய மெய்யியலாளர்
திடசு பொம்போனியசு அட்டிகசு அண். கி.மு 110-அண். கி.மு 33 வங்கியாளர், கடிதங்களின் காப்பாளர்.
சிரோ fl. கி.மு 50 எபிக்கியூரிய மெய்யியலாளர், வர்ஜிலின் ஆசிரியர்.
கி.பி 2ஆம் நூற்றாண்டு
ஒயெனோந்தாவின் டையோஜீனெசு fl. கி.பி 175 ஒயெனோந்த நகரச் சுவரில் எபிக்கியூரசுவின் உரைகளைப் பொறித்தவர்.
Remove ads

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads