எமில் டேர்க்கேம்
பிரெஞ்சு சமூகவியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எமில் டேர்க்கேம் பிரான்சைச் சேர்ந்த ஒரு சமூகவியலாளர். சமூகவியல், மானிடவியல் ஆகிய துறைகளின் உருவாக்கத்துக்கு இவரது பங்களிப்புக்கள் மிகவும் முக்கியமானவை. சமூகவியல் தொடர்பான இவரது வேலைகளும், இத் துறையின் முதலாவது இதழில் இவர் ஆசிரியராக இருந்து ஆற்றிய பணிகளும், கல்வியாளர்கள் மத்தியில் சமூகவியலை ஒரு சமூக அறிவியல்துறையாக ஏற்றுக்கொள்ள வைத்தன. தனது வாழ்க்கைக் காலத்தில் டேர்க்கேம், கல்வி, குற்றவியல், மதம், தற்கொலை போன்ற சமூகவியல் தொடர்பான தலைப்புக்களில் பல விரிவுரைகளை ஆற்றியிருப்பதுடன், பல ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளார். இவர் சமூகவியல் துறையின் நிறுவனர்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.[1][2][3]
Remove ads
வரலாறு
இளமைக்காலம்
எமில் டேர்க்கேம், அக்காலத்தில் ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த லொரைனின், பாஸ்காக் மாகாணத்தில் 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவர் பல தலைமுறைகளாக மதப்பற்றுக்கொண்ட பிரெஞ்சு யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது, தந்தை, பாட்டன், பூட்டன் எல்லோருமே யூதமதக் குருவாக இருந்தனர். ஆனால், டேர்க்கேம் சிறு வயதிலேயே இதே வழியில் செல்வதில்லை என முடிவு எடுத்தார். இவர் ஒரு மதச் சார்பற்ற வாழ்க்கை வாழ்ந்தார். இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டாலும், தனது குடும்பத்துடனும், யூத சமுதாயத்துடனுமான தொடர்புகளை அவர் விட்டுவிடவில்லை. முதன்மையான இவரது உடன்பணியாளர்களும், மாணவர்களும் யூதர்களாகவே இருந்தனர். இவர்களுட் சிலர் இவரது நெருங்கிய உறவினர்கள்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads