எம்மா தாமஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம்மா தாமசு நோலன்[1] (ஆங்கிலம்: Emma Thomas Nolan) (பிறப்பு: திசம்பர் 9, 1971) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் என்பவரின் மனைவி ஆவார்,[2] இவர் இவரது கணவர் இயக்கிய பேட்மேன் பிகின்ஸ் (2005), த பிரஸ்டீஜ் (2006), த டார்க் நைட் (2008), இன்சப்சன் (2010), த டார்க் நைட் ரைசஸ் (2012), மேன் ஆப் ஸ்டீல் (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016) போன்ற பல திரைப்படங்களில் தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது தன் கணவருடனும் மற்றும் நான்கு பிள்ளைகளுடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் வசிக்கின்றார். தாமஸ் தனது வாழ்க்கை முழுவதும் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார், இதில் ஒன்று அகாதமி விருது, பிரித்தானிய அகாடமி திரைப்பட விருது மற்றும் ஒரு கோல்டன் குளோப் விருது ஆகியவை அடங்கும். இந்த விருதுகள் வாழ்க்கை வரலாற்று திரில்லர் படமான ஓப்பன்கைமர் தயாரிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளன. (2023)
Remove ads
தயாரித்தத் திரைப்படங்கள்
- 1997 - டூடில்பக்
- 1998 - பால்லோவிங்
- 2000 - மெமன்டோ
- 2002 - இன்சாம்னியா
- 2005 - பேட்மேன் பிகின்ஸ்
- 2006 - த பிரஸ்டீஜ்
- 2008 - த டார்க் நைட்
- 2010 - இன்சப்சன்
- 2012 - த டார்க் நைட் ரைசஸ்
- 2013 - மேன் ஆப் ஸ்டீல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads