கிறிஸ்டோபர் நோலன்
21ம் நூற்றாண்டின் தலைசிறந்த திரைப்பட இயக்குனர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிறிஸ்டோபர் நோலன் (பிறப்பு: சூலை 30, 1970) ஓர் ஐக்கிய அமெரிக்க/இராச்சிய திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் சிறப்பாக திரைப்படங்களின் திரைக்கதைகளை எழுதியுள்ளார். சின்காபி திரைப்படங்கள் என்றொரு திரைப்பட நிறுவனத்தினை நிறுவியுள்ளார். இவரது மெமன்டோ திரைப்படம் மிகவும் பாராட்டப்பட்டத் திரைப்படமாகும். அத்திரைப்படம் மிகுந்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. கிறிஸ்டோபர் நோலன் இன்றைய சிறந்த ஆங்கிலத் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
நோலன் தனது இளம் பருவத்தினை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கியப் பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழகக் கல்லூரியில் பெற்றார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் 1998 இல் பால்லோவிங் திரைப்படத்தினை இயக்கும் முன் பல குறும்படங்களை உருவாக்கினார். நோலன் தனது இரண்டாவது படமான மெமெண்டோ (2000) மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். அதற்காக இவர் சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதுதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2]
இன்சோம்னியா (2002) மூலம் தனது சொந்த திரைப்படத் தயாரிப்பிற்கு மாறினார். மேலும் தி டார்க் நைட் முத்தொகுப்பு (2005-2012), தி ப்ரெஸ்டீஜ் (2006) மற்றும் இன்செப்ஷன் (2010) ஆகிய படங்களுடன் விமர்சன மற்றும் வணிக வெற்றியைக் கண்டார். இவற்றில் கடைசியாக நோலனுக்கு சிறந்த படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை என இரண்டு சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்ஸ்டெர்டெல்லர் (2014), டன்கிர்க் (2017) மற்றும் டெனட் (2020) ஆகிய படங்களை இயக்கினார். டன்கிர்க் படத்திற்காக, இவர் இரண்டு அகாதமி விருது பரிந்துரைகளைப் பெற்றார். இதில் சிறந்த இயக்குனருக்கான முதல் பரிந்துரையும் அடங்கும். நோலன் தனது 12வது படமான ஓப்பன்ஹைமர் (2023)[3] படத்திற்காக சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படத்திற்கான அகாதமி விருதை வென்றார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
நோலன், இலண்டனில் பிறந்தார். இவரது பிரித்தானிய தந்தை பிரெண்டன் நோலன் ஓர் விளம்பர எழுத்தாளர் மற்றும் இவரது அமெரிக்க தாயார் கிறிஸ்டினா (ஜென்சென்) ஓர் விமான பணிப்பெண் மற்றும் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.[4][5][6] இலண்டன் மற்றும் சிகாகோ என இரு நகரங்களில் இவரது சிறு வயது கழிந்தது. இவருக்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது.[7][8] இவருக்கு மாத்தியு எனும் அண்ணனும், ஜோனதன் எனும் தம்பியும் இருக்கின்றனர்.[9] நோலன் தனது ஏழு வயதில், தன்னிடம் இருந்த பொம்மைகளை வைத்து, தனது தந்தையின் சூப்பர் 8 காணொளிகருவி மூலம் சிறு படங்கள் உருவாக்க ஆரம்பித்தார்.[10][11] தனது பதினோராவது வயதிலிருந்து, இவர் ஓர் இயக்குநர் ஆக வேண்டும் என கனவு கண்டார்.[9]
ஹெர்ட்பொர்ட்ஷயரில் உள்ள ஹெர்ட்பொர்ட் ஹீத் எனும் ஊரில் உள்ள ஹைளிபரி மற்றும் இம்பீரியல் சர்வீஸ் காலேஜ் எனும் பள்ளியில் நோலன் பயின்றார். பின்பு, இலண்டன் யுனிவெர்சிட்டி கல்லூரியில் (யுசீஎல்) ஆங்கில இலக்கியம் பயின்றார். யுசீஎல்-லை இவர் தேர்ந்தெடுக்க காரணம், அந்தக் கல்லூரியில் இருந்த ஸ்தீன்பக் படத்தொகுப்பு அறை மற்றும் 16 மிமீ புகைப்படக் கருவிகள்தான்.[12] திரைப்படக் குழுவின் தலைவராக நோலன் இருந்தார். எம்மா தாமஸ் உடன் இணைந்து 35 மிமீ திரைப்படங்களைத் திரையிட்டு, அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு 16 மிமீ படங்கள் தயாரித்தார்.[13]
தனது கல்லூரிக் காலங்களில், நோலன் இரு குறும்படங்களை உருவாக்கினார். 1989-ஆம் ஆண்டு, "டாரன்டெல்லா" எனும் 8 மிமீ படமே இவரது முதல் படமாகும்.[14] 1995-ஆம் ஆண்டு சிறிய குழு மற்றும் கருவிகளுடன் உருவான இவரது இரண்டாவது படம் "லார்சனி".[15] நோலனின் பணம் மற்றும் குழுவின் கருவிகளுடன் உருவான அந்தப் படம், 1996-ஆம் ஆண்டு காம்ப்ரிஜ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன் யுசிஎல்-லின் சிறந்த குறும்படம் என கருதப்பட்டது.[16]
Remove ads
திரைப்படங்கள்
முழு நீளத் திரைப்படங்கள்
குறுந்திரைப்படங்கள்
தயாரிக்கும் திரைப்படங்கள்
- 2015 - பேட்மேன் சூப்பர்மேன் டாண் ஆஃப் ஜஸ்டிஸ்
Remove ads
வரவேற்பு
அக்டோபர் 2011 அன்றுவரை, வட அமெரிக்காவில் நோலனின் திரைப்படங்கள் $ 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளன. அவரது முதல் திரைப்படமான பால்லோவிங் வெறும் $48,482 வருவாயினை ஈட்டிய நிலையில் அவரது த டார்க் நைட் திரைப்படம் $533,345,358 வருவாயினை ஈட்டியது.[17]
விமர்சகர்கள்
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads