எம். இராம்குமார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எம். இராம்குமார் (M. Ramkumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் எம். இராம்குமார், பிறப்பு ...

2001 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராகவும், 2006 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகவும் போட்டியிட்ட இவர் 1996 முதல் 2001 வரை தஞ்சாவூர் மாவட்ட பஞ்சாயத்தின் தலைவராக இருந்தார்.

2011 தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான இரா. துரைக்கண்ணுவிடம் தோல்வியடைந்தார்.

அந்த தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அவர்களின் கூட்டணியும் இவர் சார்ந்திருந்த காங்கிரசின் கூட்டணி கட்சியான தி. மு. க. எதிர்க்கட்சித் தலைமை பதவியை பெறமுடியாதபடி 203 இடங்களில் வென்றன.

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் 18 ஏப்ரல் 1968 இல் கும்பகோணத்தில் பிறந்தார் . இவரது பெற்றோர் மருதப்பிள்ளை ஜெய லட்சுமி ஆவர். இவரது தந்தை மருதப்பிள்ளை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்துள்ளார். பின்னர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் ஜி. கே. மூப்பனார் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.

அரசியல் வாழ்க்கை

1976 முதல் 1980 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், 1980 முதல் 1988 வரை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகம் இருந்த ஜி. கே. மூப்பனாரின் தீவிர விசுவாசியாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இராம்குமார் மீண்டும் 1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை (டி. எம். சி.) மூபனார் நிறுவிய போது அக்கட்சியில் சேர்ந்தார்.

இவருக்கு 1991 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியின் இளைஞர் பிரிவில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் 1996 இல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு மாவட்ட பஞ்சாயத்தில் முன்னணி பதவிகளை வகித்தார். பின்னர் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மூப்பனார் குடும்பத்தின் நெருங்கிய நம்பிக்கையாளராக இருந்த இவர். ஜி. கே. மூப்பனாரின் சொந்த ஊரில் தொடர்ச்சியாக மூன்று முறை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். மூப்பனார் குடும்பத்தின் நெருங்கியவராக இருந்த போதிலும் இராம்குமார் அ. தி. மு. க-வில் சேர முடிவு செய்தார்.

ஜூன் 2016 இல் இவர் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.[1]

இவரது கட்சிதாவல் பின்னாட்களில்தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேருவதற்கு முதல்படியாக இருந்தது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads