மு. அ. குலசீலநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மு. அ. குலசீலநாதன் (சூலை 2, 1940 - மே 20, 2004, எம். ஏ. குலசீலநாதன்) ஈழத்தின் மூத்த கருநாடக, மெல்லிசைக் கலைஞர். வானொலிக் கலைஞர். சங்கீத பூஷணம். யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். ஈழத்து மெல்லிசை என்னும் ஒரு இசை வடிவத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் இவருக்கும் பெரும் பங்கு உண்டு. புலம் பெயர்ந்து பாரிசு நகரில் வாழ்ந்து வந்தார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாண மாவட்டம், அராலி நாகலிங்கம் முத்துச்சாமி என்பவருக்கும், சித்தன்கேணியைச் சேர்ந்த அருளம்மா வேதவனம் என்பவருக்கும் மூத்த மகனாக 1940 ஜூலை 2 இல் வட்டுக்கோட்டையில் குலசீலநாதன்' பிறந்தார்.
கல்வி
இவர் வட்டுக்காேட்டையில் பிறந்தாலும் தந்தையாரின் தாெழில் இடமாற்றம் காரணமாக தனது ஆரம்பநிலைக் கல்வியை 1945ல் சென்.ஜேம்ஸ் கல்லுாரியில் ஆரம்பித்தார். குலசீலநாதனின் குடும்பம் கலைக் குடும்பமாகவே இருந்தது. இவரது தாய்வழி மாமன்மார்களில் ஒருவர் புரவியாட்ட வித்தகராகவும், மற்றாெருவர் இசை நாடகக் கலைஞராகவும் சிறந்து விளங்கியவர்கள். தாய்மாமன் நாட்டுக்கூத்து ஆண்ணாவியார் கீசகன் கந்தையாவின் உந்துதலினால் இவர் குலசீலநாதன் தனது ஆறாவது வயதிலேயே இசைத்துறையில் ஈடுபடத் தொடங்கி விட்டார். விடுமுறைக் காலங்களில் வட்டுக்காேட்டையில் கற்பித்து வந்த சங்கீத ஆசிரியர் லட்சுமி நாராயணனிடம் இசை பயின்றார். பின்னர் 1956ம் ஆண்டு இனமோதல் காரணமாக குடும்பத்துடன் ஊர் திரும்பினார். வட்டுக்காேட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வியைத் தாெடர்ந்தார். இவர் தனது பாடசாலைக் காலங்களில் உதைபந்தாட்ட வீரனாகவும் கல்லுாரி விழாக் கலைநிகழ்ச்சிகளிலும் முக்கியமாகப் பங்குபற்றினார்.
உயர்நிலைக் கல்வி
இவரது இசை ஞானத்தையும் திறனையும் கண்டு வியந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபரது ஆலாேசனைக்கு ஏற்ப இசையை முறைப்படி பயில்வதற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகரிடமும், சிவசுப்பிரமணியம், ரி. கே. ரங்காச்சாரியார், மைலம் வைச்சிரவேலு முதலியார் போன்றோரிடமும் கருநாடக இசையை முறைப்படி பயின்றார். மேலும் இராகஆலாபனை முறைகளையும், தாளபேதங்களையும் ஜனரஞ்சகமாக ரசனையூட்டும் விதத்தில் கச்சேரிகள் பாடுவதற்கு ஏற்றவாறு தான் கற்ற சங்கீதக் கலையை விருத்திப்படுத்திக் கொள்ள பாலமுரளி கிருஷ்ணாவிடமும் விசேடமாக கர்நாடக சங்கீதக் கலையைப் பயின்றுள்ளார். 1964 ஏப்ரல் 29ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல்தர சித்தியெய்தி சங்கீத பூசணம் பட்டத்தினைப் பெற்றார்.
Remove ads
இல்லறம்
இவர் 1971-ஆம் ஆண்டு நட்சத்திரம்-வரதலட்சுமியம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியான சிவநாயகியை தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் காெண்டார். இவர்களுக்கு காேகிலவாணி, செந்தூர்நாதன், கமலாேற்பவநாதன், கணேசநாதன், தனுசிகா ஆகிய ஐந்து பிள்ளைகள் உள்ளனர். 1983 இனக்கலவரத்தின் பின் சிங்கப்பூர், மலேசியா, பாரிஸ் பாேன்ற நாடுகளில் வசித்து வந்தார்.
தாெழில்
இவரின் இசைத்திறனை அறிந்து கொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிகாரிகள் இவரை அங்கு அழைத்து இசைக்கச்சேரிகளுக்கு இடமளித்தார்கள். 1968ல் பகுதி நேர இசைத் தயாரிப்பாளராக பணியாற்றிய இவரை 1970ல் நிரந்தர இசைத் தயாரிப்பாளராக்கி 1971ல் மெல்லிசைத் தயாரிப்பாளராகப் பதவி பெற்று 1981ல் இசைக்கட்டுப்பாட்டாளர் பதவி வரை உயர்ந்தார். 1983-1985 வரை சிங்கப்பூர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் 1985 ஜூன் முதல் 1990 வரை றேடியாே ரெலாெ மலேசியா வானாெலியில் இசை ஆலாேசகராகவும் பணியாற்றினார்.
இசைப் பணி
மெல்லிசைப்பணி
இசைபிருந்தா என்ற மெல்லிசைப் பிரவாகத்தில் எஸ். கே. பரராஜசிங்கம், வி. முத்தழகு, எஸ். கலாவதி, அருந்ததி சிறீரங்கநாதன், ரா. ஜெயலஷ்மி, சுபத்திரா, சந்திரமோகன், அம்பிகா தாமோதரம், கௌரீஸ்வரி ராஜப்பன் போன்ற பல கலைஞர்களை இவர் ஈடுபடுத்தினார். பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போனறோருடன் இணைந்து இசைச்சித்திரம் போன்ற நிகழ்ச்சிகளை ஆய்வுக்குரிய வகையில் தயாரித்தார். இவரது இசைக்கச்சேரிகள் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் நடைபெற்றுள்ளன.
இலங்கையில் வெளியான குத்துவிளக்கு திரைப்படத்திற்காக ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே என்ற பாடலையும் பாடியுள்ளார்.
இவர் பாரிசு நகரில் புகலிடவாழ்வில் ...முகத்தார் வீடு, இன்னுமொருபெண் ஆகிய சின்னத்திரைகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
பாடிய சில பாடல்கள்
- சந்தன மேடை என் இதயத்திலே (எஸ். கே. பரராஜசிங்கத்துடன் இணைந்து, பாடல் வரிகள்: என். சண்முகலிங்கன்)
- ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே (பாடல் வரிகள்: ஈழத்து இரத்தினம்)
இசையமைத்த சில பாடல்கள்
- சந்தன மேடை என் இதயத்திலே
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads