எயர் ஏசியா எக்சு

மலேசியாவின் நீண்ட தொலைவிற்கு இயக்கப்படும் குறைந்த கட்டண சேவை வழங்கும் வான்வழிப் போக்குவரத்த From Wikipedia, the free encyclopedia

எயர் ஏசியா எக்சு
Remove ads

ஏர்ஏசியா எக்சு (ஆங்கிலம்: AirAsia X மலாய்: Syarikat Penerbangan AirAsia X; சீனம்: 全亞洲航空) என்பது மலேசியாவைச் சார்ந்த நீண்ட தொலைவிற்கு இயக்கப்படும் குறைந்த கட்டணச் சேவை வழங்கும் வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும்.

விரைவான உண்மைகள் IATA, ICAO ...
Thumb
மெல்பேர்ண் வானூர்தி நிலையத்தில் ஏர்ஏசியா எக்சின் ஏர்பஸ் ஏ330-300

இதனை முன்பு பிளை ஏசியன் எக்சுபிரசு நிறுவனம் (FlyAsianXpress Sdn. Bhd.) என்று அறியப்பட்ட எயர் ஏசியா எக்சு நிறுவனம் இயக்குகிறது. இது ஆசியாவின் மிகப் பெரிய குறைந்த கட்டண சேவையாளரான எயர் ஏசியாவின் பன்னாட்டு இயக்க வணிகப் பெயராகும்.

பொதுவான சீட்டு வழங்கும் அமைப்பு, வானூர்தி உட்புற துணியமைப்பு, ஊழியர் சீருடைகள் மற்றும் மேலாண்மை வண்ணம் இவற்றால் தனது செலவுகளைக் குறைத்துக் கொண்டு குறைந்த கட்டணம் வழங்க முடிகிறது.[2]

Remove ads

வரலாறு

இந்த நிறுவனம் நவம்பர் 2, 2007-இல் தனது சேவைகளைத் துவக்கியது. இதன் முதல் சேவை மலேசியாவின் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் கோல்டு கோசுட்டு வானூர்தி நிலையம் வரையில் இருந்தது.

ஏர்ஏசியா எக்சு X ஆசியா மற்றும் ஓசியானியாவிலுள்ள சேரிடங்களுக்கு தனது சேவைகளை வழங்குகிறது. இதன் வான்தொகுப்பில் 11 வானூர்திகள் தற்போது உள்ளன; கூடுதல் வானூர்திகள் வாங்க ஆணைகள் கொடுத்துள்ளது.

ஏர்ஏசியா எக்சு X வெர்ஜின் குழமத்துடனும்[3] ஏர் கனடாவுடனும் பிணைக்கப்பட்டுள்ளது.

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads