எயார்டெல் (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏர்ட்டெல் அல்லது எயார்டெல் (Airtel Sri Lanka) இலங்கையில் நகர்பேசித் தொலைத்தொடர்புச் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இது இந்தியாவின் பாரதி ஏர்ட்டெல் நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஆகும். இலங்கையின் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு 2006ஆம் ஆண்டளவில் ஏர்ட்டெல்லிற்கு அனுமதியளித்து, 2007இன் முற்பகுதியில் நடவடிக்கைகளைத் தொடங்குவதாக இருந்தது. எனினும் எயார்டெல் ஜனவரி 12, 2009 முதலே இலங்கையில் சேவைகளை ஆரம்பித்து வழங்கிவருகின்றது. இந்த நிறுவனத்திற்கு 1.1 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1] இது இலங்கையின் மொத்த நகர்பேசிப்பாவனையாளர்களின் தொகையில் 8% ஆகும்[2].
Remove ads
வலையமைப்புக் குறியீடு
MNC: 413 05 சேவை வழங்குநரின் குறியீடு: 075
சேவைகள்
இது இலங்கையின் சகல மாவட்டங்களிலும் சேவையை விரிவாக்கியுள்ளது.
எயார்டெல் நிறுவனம் குரல் அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்பனவற்றை வழங்குகின்றது. இலங்கையின் கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே 3ஜி அகலப்பட்டை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்குப் பகுதிக்கான 2ஜி எட்ஜ் (நொடிக்கு 236.8 கிலோபிட்ஸ்) அளவிலான எட்ஜ் தொழில்நுட்பத்துடன் கூடிய இணைய சேவைகளையும் வழங்குகின்றது. அகலப்பட்டை இணைப்பைக் கிழக்கில் பெற்றுக்கொள்ளவோ விநியோகிக்கவோ முடியாது இதைத் தலைமை அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொண்டு கிழக்கிலும் பாவிக்கலாம். முற்கொடுப்பனவுக் கொடுப்பனவுகள் இலக்கங்கள் காலாவதியாகி 3 மாதங்களில் மீள்சுழற்சி செய்யப்படும். அகலப்பட்டை இணைப்பில் ஒலி அழைப்பை ஏற்படுத்தமுடியாது எனினும் குறுஞ்செய்திகளை அனுப்பலாம். ஏர்ட்டெல் இலங்கையில் 1000இற்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பாடற் கோபுரங்களைக் கொண்டுள்ளது.
முற்கொடுப்பனவு செய்யப்பட்ட இணைய இணைப்பிற்கு APN airtellive உம் பிற்கொடுப்பனவிற்கு APN airtelpower உம் ஆகும். வடக்கு மாகணத்தின் வவுனியா மன்னார் கிளிநொச்சி முல்லைதீவு மாவட்டங்களில் சில இடங்களில் சேவை கிடைப்பதில்லை, சேவை கிடைக்கும் பல இடங்களில் 3ஜி சேவை கிடைப்பதில்லை
Remove ads
கிளை, வாடிக்கையாளர் சேவை விபரங்கள்
ஏர்ட்டெல் தொலைபேசியில் இருந்து 555 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலமோ அல்லது ஏனைய தொலைபேசிகளில் இருந்து 0755555555ஐ அழைப்பதன் மூலமோ வாடிக்கையாளர் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். இது தவிர 555@airtel.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும வாடிக்கையாளர் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் சேவையைப் பெறும்போது முதலாவது மொழி சிங்களம், இரண்டாவது தமிழ், மூன்றாtது ஆங்கிலம் ஆகும்.
இவற்றையும் காணவும்
வெளியிணைப்புகள்
- ஏர்ட்டெல் பரணிடப்பட்டது 2011-04-30 at the வந்தவழி இயந்திரம் இலங்கையின் அதிகராப்பூர்வத் தளம்]
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads