எய்மிஸ்ட் பல்கலைக்கழகம்
ஆசிய மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பக் கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எய்மிஸ்ட் பல்கலைக்கழகம் அல்லது ஆசிய மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பக் கழகம்; (மலாய்: Universiti AIMST (Institut Perubatan, Sains & Teknologi Asia); ஆங்கிலம்: AIMST University (Asian Institute of Medicine, Science & Technology) என்பது மலேசியா, கெடா, கோலா மூடா மாவட்டம், பீடோங் நகர்ப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.
மலேசிய இந்தியர் மாணவர்களுக்கான உயர்க் கல்வியில்; குறிப்பாக மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியல், வணிக மேலாண்மை துறைகளில், அதிக வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் 32-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகளை, இந்தப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.
ம.இ.காவின் கல்விக் கரமாக விளங்கி வரும் மாஜு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால் (Maju Institute of Educational Development) (MIED) 2001 மார்ச் 21-ஆம் தேதி, ம.இ.காவின் முன்னாள் தலைவர் துன் ச. சாமிவேலு அவர்களின் முயற்சிகளினால், இந்த மருத்துவப் பல்கலைக்கழகம் திறப்புவிழா கண்டது.[2]
Remove ads
பொது

எய்மிஸ்ட் பல்கலைக்கழகம், 1996-ஆம் ஆண்டின் தனியார் உயர்க் கல்வி நிறுவனங்கள் சட்டத்தின் 38-ஆவது; 39-ஆவது பிரிவின் கீழ், மலேசிய உயர்க் கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகம், 30 அக்டோபர் 2001 அன்று, மலேசிய உயர்க் கல்வி அமைச்சின் கீழ் உள்ள தனியார் கல்வித் துறையில் பதிவு செய்யப்பட்ட பின்னர் முறையாகச் செயல்படத் தொடங்கியது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வித் துறைகள்; மலேசிய தர நிர்ணய அமைவனம் (Malaysian Qualifications Agency); மற்றும் மலேசிய உயர்க் கல்வி அமைச்சின் அங்கீகாரங்களைப் பெற்றவை. அத்துடன் பல்கலைக்கழகத்தின் கல்விசார் துறைகள் மலேசிய பொதுச் சேவைகள் துறையாலும் (Public Services Department) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.
துன் சாமிவேலு
2013-ஆம் ஆண்டு மலேசிய தர நிர்ணய அமைப்பின் தர மதிப்பீட்டில், எய்மிஸ்ட் பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம், 4 அடுக்கு என மதிப்பிடப்பட்டது. அத்துடன் அதே 2013-ஆம் ஆண்டின் மருத்துவம், மருந்தகம் மற்றும் பல் மருத்துவ கற்பித்தலுக்கான மலேசிய தர மதிப்பீடும் 4 அடுக்கு என மதிப்பிடப்பட்டது. மலேசிய தர நிர்ணய அமைப்பின் தர மதிப்பீட்டில் மிக உயர்ந்த அடுக்கு 5 ஆகும்.[3]
ம.இ.காவின் 51-ஆவது பொதுக்கூட்டத்தின் போது, ம.இ.காவின் கல்விப் பிரிவான மாஜு கல்வி அறக்கட்டளையின் மூலம் புதிய பல்கலைக்கழகம் திறக்கப்படுவதைப் பற்றி துன் ச. சாமிவேலு அறிவித்தார்.[6] பின்னர் கெடாவில் உள்ள சுங்கை பட்டாணியில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான விண்ணப்பம், மலேசிய உயர்க் கல்வி அமைச்சு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த திட்ட மேலாளராக நுசந்தரா திட்டமிடல் நிறுவனம்; பொறியாளராக மின்கன்சல்ட் நிறுவனம்; நில அளவையாலராக கே.பி.கே நிறுவனம்; ஆகிய நிறுவனங்கள் பல்கலைக்கழகக் கட்டுமானப் பணிகளில் அமர்த்தப்பட்டன.
துறைகள்
- மருத்துவத் துறை
- பல் மருத்துவத் துறை
- மருந்தியல் துறை
- சுகாதாரத் தொழில்கள் தொடர்பான துறை
- பயன்பாட்டு அறிவியல் துறை
- பொறியியல் மற்றும் கணினி தொழில்நுட்பத் துறை
- வணிகம் மற்றும் மேலாண்மை துறை
- அறக்கட்டளை ஆய்வுகள் துறை
- வாழ்நாள் கற்றல் மையம்
மாணவர் விடுதி
அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. சேவை வளாகத்தில் உள்ள உணவு விடுதிகளும் உள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்களுக்குப் பேருந்து போக்குவரத்து உள்ளது. இருப்பினும் போதுமானதாக இல்லை என அறியப்படுகிறது .
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு
இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளரங்க விளையாட்டு வளாகம் உள்ளது. அங்கு கூடைப்பந்து, பூப்பந்து, சுவர்ப்பந்து மற்றும் மேசைப் பந்தாட்டம் ஆகியவற்றிற்கான வசதிகள் உள்ளன; உடற்பயிற்சிக் கூடம் மற்றும் வெளிப்புற நீச்சல் குளம் போன்ற வசதிகளும் கிடைக்கின்றன.
அத்துடன் கால்பந்து, வளைகோற் பந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற விளையாட்டுப் போட்டிகளைப் பன்னாட்டு அளவிலும் இந்தப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.[4]
Remove ads
காட்சியகம்
- பல்கலைக்கழக நூலகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads