எரோதுகளின் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எரோதிய இராச்சியம் (Herodian kingdom)[1][2]அகஸ்ட்டஸ் காலத்திய உரோமைக் குடியரசுக்குட்பட்ட கப்பம் ஒரு சிற்றரசு ஆகும்.[3] மக்கபேயர் இராச்சியத்தை வீழ்த்தி இசுரேல் இராச்சியத்தை நிறுவியவர் முதலாம் ஏரோது எனும் யூதர் ஆவார். இதன் தலைநகரம் எருசலேம் ஆகும். மன்னர் முதலாம் எரோது இந்த இராச்சியத்தை கிமு 37 முதல் கிமு 4 வரை ஆட்சி செய்தார்.
மன்னர் முதலாம் ஏரோது கிமு 4ல் இறந்த பின்னர் அவரது 3 மகன்கள் எரோதிய இராச்சியத்தை யூதேயா, சமாரியா மற்றும் இதுமியா என மூன்றாகப் பிரித்துக் கொண்டு ஆண்டனர். கிபி 6ல் எரோது மன்னரின் 3 மகன்கள் ஆட்சி செய்த பகுதிகளை உரோமைப் பேரரசு கலைத்து விட்டு, ஒட்டு மொத்த எரோது இராச்சியத்தை, உரோமைப் பேரரசின் ஆளுநர் கீழ் ஆளப்பட்டது. கிபி 37 முதல் 41 வரை உரோமைப் பேரரசராக இருந்த காலிகுலா, கலிலேயாவை ஆண்ட யூத சிற்றரசை கலைத்து விட்டு, யூத மாகாணத்துடன் இணைத்தார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads