எர்சின்கான் மாகாணம்
துருக்கி மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எர்சின்கான் மாகாணம் (Erzincan Province, துருக்கியம்: Erzincan ili , Kurdish Zazaki , [2] ) என்பது துருக்கியின், கிழக்கு அனடோலியா பிராந்தியத்தில் உள்ள ஒரு மாகாணமாகும் . இதன் தலைநகரம் எர்சின்கான் என்றும் அழைக்கப்படுகிறது. 2010 இல் மாகாணத்தின் மக்கள் தொகை 224,949 என இருந்தது.
Remove ads
நிலவியல்
இது வடக்கு அனதோலியாவில் அமைந்துள்ளது. இது 27 திசம்பர் 1939 இல் ஏற்பட்ட பூகம்பங்கள் [3] மற்றும் 13 மார்ச்1992 அன்று ஏற்பட்ட பூகம்பம் போன்றவற்றால் பாதிப்புக்கு ஆளானது. [4]
மாவட்டங்கள்

எர்சின்கான் மாகாணம் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):
- கய்ரில்
- எர்சின்கன்
- இல்லிக்
- கெமா
- கெமலியே
- ஒட்லுக்பெலி
- ரெஃபாஹியே
- டெர்கான்
- உசுமுலு
வரலாறு
1935 செப்டம்பரில் மூன்றாவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் ( உமுமி மெஃபெட்டிக்லிக், யுஎம்) உருவாக்கப்பட்டது, [5] இதில் எர்சின்கான் மாகாணமும் சேர்க்கப்பட்டது. இது 1927 சூனின் சட்டம் 1164 ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்ககபட்டது. இது மக்களை பிற தேசிய இனத்தவரைதுருக்கியமயமாக்குவதற்காக நிறைவேற்றப்பட்டது. [6] இந்த மூன்றாவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் பகுதியுடன் எர்சின்கான் மாகாணம் மட்டுமல்லாது, எர்சுரம், ஆர்ட்வின், ரைஸ், டிராப்சன், கார்ஸ், கோமஹேன், எர்சின்கான், ஆரே மாகாணங்கள் சேர்க்கபட்டன. இது எர்சுரம் நகரில் அமர்ந்திருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரலால் நிர்வகிக்கப்பட்டது. 1936 சனவரியில், நான்காவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் நிறுவப்பட்டது. பின்னர் இந்த நான்காவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரலின் அதிகாரத்தின் கீழ் மாகாணம் மாற்றப்பட்டது. இந்த நான்காவது யுஎம்மில் எர்சின்கான், துன்செலி, எலாசே மாகாணங்கள் மற்றும் பிங்கால் மாகாணமாக மாற்றபட்ட பகுதிகளும் அடங்கும். நான்காவது யுஎம் ஆளுநர் தளபதியால் நிர்வகிக்கப்பட்டது. நகராட்சிகளில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆளுநர் தளபதிக்கு முழு கிராம மக்களையும் வெளியேற்றி மற்ற பகுதிகளில் மீள்குடியேற்ற அதிகாரம் கொண்டவராக இருந்தார். இன்ஸ்பெக்டரேட்டுகள் ஜெனரல் 1952 இல் ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் போது கலைக்கப்பட்டது.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads