எஸ். சிவராஜ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

எஸ். சிவராஜ் (S. Sivaraj) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார்.  இந்திய தேசிய காங்கிரசு ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட தலைவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் 1984, 2006-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற  தமிழ்நாடு சட்டமன்றதேர்தலில் இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் தமிழ் மாநில காங்கிரசு ( மூப்பனார்) அணி வேட்பாளராக இருந்தார்

அரசியல் வரலாறு

2011 ஆண்டுக்கு பிறகு புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் அதிமுகவில் இணைத்து செயல்பட்டார் , காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக இருந்த போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அப்போதய இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் மாண்புமிகு ராகுல் காந்தி அவர்களை இளைஞரணி ஆலேசனை கூட்டத்திற்கு ஆலோசனை வழங்க சிறப்பு அழைப்பாளராக திருக்கோவிலூருக்கே அழைத்துவந்து அகில இந்திய அளவில் உயர்ந்தார் 2016 டிசம்பர் 5 அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதிமுகவின் பொருளாளர் திரு ஓபிஎஸ், புரட்சி தலைவி அம்மா அவர்களின் வாரிசு அண்ணன் மகள் இளைய புரட்சி தலைவி ஜெ. தீபா ஆகியோர் தலைமையேற்றார் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் திருமதி விகே சசிகலா, அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் செயல்பட்டார் 15 மார்ச் 2018 ல் டிடிவி.தினகரன் அவர்கள் ஆரம்பித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்து அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பதவி வகித்தார் மறைவு வரை அப்பதவியில் இருந்தார்..[3][4]

Remove ads

பிறப்பு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரத்தைச் சேர்ந்த சமீன்தார் எம். சுப்பிரமணிய முதலியாருக்கு மகனாக பிப்ரவரி 16, 1955 ஆம் ஆண்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில் பிறந்தார்.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads