ஏரியே வார்செல்

From Wikipedia, the free encyclopedia

ஏரியே வார்செல்
Remove ads

ஏரியே வார்செல் (Arieh Warshel, பிறப்பு: நவம்பர் 20, 1940) என்பவர் இசுரேலிய-அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவர் வேதியியல், உயிர்வேதியியல் பேராசிரியராக தென் கலிபோர்னியா பல்கலைக்கழக்த்தில் பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், மற்றும் மார்ட்டின் கார்ப்பிளசு, மைக்கேல் லெவிட் ஆகியோருக்கும் "சிக்கலான வேதி அமைப்புகளுக்கான மாதிரிகளின் வளர்ச்சிக்கு," ஆற்றிய சேவைக்காக வழங்கப்பட்டது.[1][2]

விரைவான உண்மைகள் ஏரியே வார்ஷெல்Arieh Warshel, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

1940 ஆம் ஆண்டில் இசுரேலில் பிறந்த ஏரியே வார்செல் இசுரேலிய இராணுவத்தில் கலபதியாகப் பணியாற்றிய போது ஆறு நாள் போர், யோம் கிப்பூர்ப் போர், ஆகியவற்றில் பங்கு பற்றியிருந்தார்.[3] டெக்னயன் கல்லூரியில் 1966 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து இசுரேலின் வீசுமன் அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். அதன் பின்னர் 1972 முதல் 1976 வரை ஹார்வார்டு பல்கலைக்கழக்தில் பணியாற்றிய பின்னர் மீண்டும் இசுரேல் திரும்பி வீசுமன் அறிவியல் கழகத்திலும், கேம்பிரிட்சில் உள்ள மூலக்கூற்று உயிரியல் ஆய்வுகூடத்தில் பணியாற்றினார். 1976 இல் இருந்து தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பீடத்தில் பணியாற்றி வருகிறார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads