மார்ட்டின் கார்ப்பிளசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்ட்டின் கார்ப்பிளசு (Martin Karplus, பிறப்பு: மார்ச் 15, 1930) என்பவர் ஆசுதிரியாவில் பிறந்த அமெரிக்க வேதியியலாளர் ஆவார். 2013 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு "சிக்கலான வேதி அமைப்புகளுக்கான மாதிரிகளின் வளர்ச்சிக்காக," இவருக்கும், மைக்கேல் லெவிட், ஏரியா வார்செல் ஆகியோருக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.[1][2]
கார்ப்பிளசு வியென்னாவில் புகழ் பெற்ற யூதக் குடும்பத்தில் பிறந்தார். ஆத்திரியாவில் நாட்சி-ஆட்சி இருந்த போது கார்ப்பிளசு சிறு வயதாக இருக்கும் போதே அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது.[3].
1950 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். லின்னஸ் பாலிங் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டே 1954 இல் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்), கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர் 1967 இல் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads