ஏரி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏரி மாவட்டம் (Lake District அல்லது The Lakes அல்லது Lakeland) வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (ஃபெல்கள்) ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ஏரி கவிஞர்கள் என அறியப்படும் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது.
இப்பகுதி தேசியப் பூங்காவாக மே 9, 1951இல் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் பீக் மாவட்டத்தை அடுத்து தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது இதுவே ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் மிகவும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தேசியப் பூங்காவாக இது உள்ளது.ஆண்டுக்கு 15.8 மில்லியன் வருகைகளும் ஆண்டுக்கு நாள் வருகையாளர்கள் 23 மில்லியனாகவும் உள்ளது.[1][2]
இங்கிலாந்திலேயே மிக உயர்ந்த சிகரமாகிய இசுகாஃபெல் பைக் இங்குதான் உள்ளது. இங்கிலாந்தின் மிக ஆழமான ஏரியான வெஸ்ட் வாட்டரும் மிக நீளமான ஏரியான வின்டர்மெரியும் இந்த தேசியப் பூங்காவில்தான் உள்ளது.
Remove ads
சான்றுகோள்கள்
மேல் தகவல்களுக்கு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads