ஏர்ஏசியா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஏர் ஏசியா (ஆங்கிலம்: AirAsia; மலாய்: AirAsia; சீனம்: 亞洲航空) என்பது மலேசியாவைச் சேர்ந்த குறைந்த செலவு விமானச் சேவை நிறுவனமாகும். உள்ளூர், பன்னாட்டு விமானச் சேவை வழங்கும் இந்த நிறுவனம், ஆசியாவில் முன்னணி வகிக்கும் குறைந்த செலவு விமானச் சேவை நிறுவனமாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் IATA, ICAO ...

தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் விமான நுழைவுச் சீட்டுக்கள், இருக்கைப் பதிவுகள் இல்லாமல் சேவைகளை நடத்தத் தொடங்கிய முதல் நிறுவனம். இந்த நிறுவனம், 20 டிசம்பர் 1993-இல் தன் சேவையைத் தொடங்கியது.

1993-ஆம் ஆண்டில் இருந்து 1996-ஆம் ஆண்டு வரை இயங்கிய இந்த நிறுவனம், ஓர் அரச நிறுவனத்திற்குச் (DRB-HICOM) சொந்தமாக இருந்தது. தொடர்ச்சியாக நட்டம் அடைந்து கடன் சுமையில் இருந்த நிலையில் 2001-இல் டோனி பெர்னாண்டஸ் என்பவரால் ஒரு ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்டது. அப்போது அதற்கு 40 மில்லியன் ரிங்கிட் கடன் இருந்தது. பின்னர், திட்டமிட்டச் செயல்பாடுகள்; சரியான அணுகுமுறைகளினால் இப்பொழுது வேகமாக வளர்ச்சி அடைந்து வலுவான நிலையில் உள்ளது.

Remove ads

பொது

மலேசியாவின் கோலாலம்பூர் மாநகரினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவை ஏர் ஏசியா (Tune Air Sdn Bhd) விமானச் சேவையாகும். ஏர் ஏசியா நிறுவனம் கால அட்டவணைப்படி செயல்படும் விமானச் சேவைகளை, உள்நாட்டு மற்றும் அனைத்துலக அளவில், 25 நாடுகளின் 165 இலக்குகளில் செயல்படுத்துகிறது.[2]

ஏர் ஏசியா மலேசியாவின், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (Kuala Lumpur International Airport - KLIA) மையமாகக் கொண்டு செயல்படுகிறது. தாய் ஏர் ஏசியா (Thai AirAsia), இந்தோனேசியா ஏர் ஏசியா (Indonesia AirAsia), பிலிப்பைன்ஸ் ஏர் ஏசியா (Philippines AirAsia), ஏர் ஏசியா ஜெஸ்ட் (AirAsia Zest) மற்றும் ஏர் ஏசியா இந்தியா (AirAsia India) போன்றவை ஏர் ஏசியா விமானச் சேவையின் சார்பில் செயல்படும் விமானச் சேவைகளாகும்.

ஏர்ஏசியா எக்ஸ்

இதில் ஏர் ஏசியா இந்தியா விமானச் சேவையானது, டான் மூவாங்க் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Don Mueang International Airport); சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Jakarta–Soekarno-Hatta); நினோய் அகியூனோ பன்னாட்டு வானூர்தி நிலையம் (Ninoy Aquino International Airport) மற்றும் கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kempegowda International Airport) ஆகியவற்றினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.

இதன் கிளை விமானச் சேவையான ஏர்ஏசியா எக்ஸ் (AirAsia X)[3] நீண்ட தொலைவு பயணிக்கும் விமானச் சேவைகளைச் செயல்படுத்துகிறது. ஏர் ஏசியாவின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சிலாங்கூர் மாநிலத்தின் பெட்டாலிங் ஜெயா மாநகரில் உள்ளது. இதன் தலைமை அலுவலகம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ளது.

Remove ads

இலக்குகள்

ஏர் ஏசியா மட்டும் தினமும் 255 விமானங்களைச் செயல்படுத்துகிறது.[4] கிளைச் சேவைகளைச் சேர்க்காமல், ஏர் ஏசியா எக்ஸ் தினமும் 35 விமானங்களைச் செயல்படுத்துகிறது.

மேலதிகத் தகவல்கள் நகரம், நாடு ...
Remove ads

இதனையும் காண்க

உயர்தர வழித்தடங்கள்

ஏர் ஏசியா கோலாலம்பூர் – சிங்கப்பூர், சிங்கப்பூர் – கோலாலம்பூர், கோலாலம்பூர் – கோடா கின்பாலு, கோலாலம்பூர் – பெனங்க் ஆகிய வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 73, 73, 70 மற்றும் 63 விமானங்களைச் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானங்களை சிங்கப்பூர் – குச்சிங்க் மற்றும் மேல் – கோலாலம்பூர் வழித்தடங்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads