ஏலாக்குறிச்சி

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஏலாக்குறிச்சி (Elakkurichi) தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1][2] அரியலூர் நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவிலும் தஞ்சாவூர் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கி.பி. 1711-ஆம் ஆண்டில் 'வீரமாமுனிவர்' என்று அழைக்கப்படும் பிரபல கத்தோலிக்க மத போதகர் கான்ஸ்டாண்டைன் ஜோசப் பெஸ்கியால் கட்டப்பட்ட பழமையான தேவாலயம் (அடைக்கல மாதா ஆலயம்) இங்கு உள்ளது.[சான்று தேவை]. இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. அருகில் உள்ள 30-இற்கு மேற்பட்ட கிராமங்களில் மிக முக்கியமான கிராமம் ஏலாக்குறிச்சி.

விரைவான உண்மைகள் ஏலாக்குறிச்சி திருக்காவலூர், நாடு ...

ஏலாக்குறிச்சி கத்தோலிக்க புனித யாத்திரை மையமாக விளங்குகிறது. இது பெரம்பலூரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது. கத்தோலிக்க மதபோதகர் வீரமாமுனிவர் 1711-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தொல்லியல் தேவாலயம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. 'அடைக்கலமாதா சன்னதி' என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஆலயம் ஏலாக்குறிச்சியில் உள்ளது. ஒவ்வொரு வருடமும், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா கோயிலின் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. அந்த பண்டிகையை எல்லா கிறிஸ்தவர்களும் ஏப்ரல் மாதத்தில் நான்கு நாட்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

இந்த சிற்றூர்/கிராமம், கொள்ளிடம் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏலாக்குறிச்சி மக்களின் முக்கிய தொழிலானது விவசாயம் இங்கு விளைவிக்கப்படும் முக்கிய பயிர்கள் அரிசி மற்றும் கரும்பு ஆகும். தஞ்சாவூர், திருவையாறு மற்றும் அரியலூர் இந்த கிராமம் அருகிலுள்ள நகரங்களாகும். நெல் வயல்களின் பசுமை மற்றும் கொள்ளிடம் நதி இந்த கிராமத்தின் அழகு.

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads