ஏழுதேசம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏழுதேசம் (ஆங்கிலம்:Ezhudesam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இந்நகரத்தில் 35 துணை கிராமங்கள் உள்ளது. இது கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது
Remove ads
2021-இல் கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைத்தல்
கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளைக் கொண்டு 16 அக்டோபர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[3][4]
அமைவிடம்
இது கன்னியாகுமரியிலிருந்து 61 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 11 கி.மீ. தொலைவில் குழித்துறையில் உள்ளது. இதன் கிழக்கில் 3 கி.மீ. தொலைவில் புதுக்கடையும்; மேற்கில் 5 கி.மீ. தொலைவில் கொல்லங்கோடும், வடக்கில் 7 கி.மீ. தொலைவில் களியக்காவிளையும்; தெற்கில் 2 கி.மீ. தொலைவில் அரபுக் கடலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6114 வீடுகளும், 24,657 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads