ஏ. எல். பசாம்

பிரித்தானிய வரலாற்று ஆய்வாளரும், இந்தியவியல் அறிஞரும் ஆவார் From Wikipedia, the free encyclopedia

ஏ. எல். பசாம்
Remove ads

ஏ. எல். பசாம் என்ற ஆர்தர் லெவெலின் பசாம் (Arthur Llewellyn Basham) (24 மே 1914 – 27 சனவரி 1986) புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளரும், இந்தியவியல் அறிஞரும் ஆவார். பல வரலாற்று நூல்களை படைத்தவர். லண்டனில் உள்ள கீழை மற்றும் ஆப்பிரிக்கப் படிப்பு பள்ளியில், 1950களிலும், 1960களிலும் பேரராசிரியாக பணியாற்றியவர். இவரது இந்திய மாணவர்களில் ரூமிலா தாப்பர், ராம் சரண் சர்மா மற்றும் வி. எஸ். பதக் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

விரைவான உண்மைகள் ஏ. எல். பசாம், பிறப்பு ...
Thumb
மைசூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில் ஏ. எல். பசாம், (இடமிருந்து மூன்றாவதாக)
Remove ads

இளமை

லண்டனில் உள்ள கீழைநாடு மற்று ஆப்பிரிக்க படிப்புப் பள்ளியில் (SOAS) சமசுகிருத மொழியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர். பின்னர் இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய இராச்சியத்தின் சிவில் பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்தார்.[1]

கல்விப் பணியில்

ஆசீவகர்களின் வரலாறு மற்றும் தத்துவங்கள் குறித்து ஆய்வு செய்து 1950ல் முனைவர் பட்டம் பெற்றார். 1954ல் லண்டன் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்கப் படிப்புப் பள்ளியில் (SOAS) ரீடர் பதவியிலும், 1958ல் பேராசிரியர் பதவியிலும், 1965ல் வரலாற்றுத் துறைத் தலைவர் பதவியிலும் தரம் உயர்த்தப்பட்டார்.[1]

1979ல் பதவி ஓய்வு பெற்ற ஏ. எல். பசாம், உலகத்தின் பல பல்கலைகழகங்களில் வருகைப் பேராசிரியராகச் செயல்பட்டார். சுவாமி விவேகாநந்தரின் கொள்கைகளில் அதிக ஈர்ப்பு கொண்ட ஏ. எல். பசாம், 1986ல் கொல்கத்தாவில் மரணம் அடைந்தார்.

Remove ads

இயற்றிய நூல்களும், கட்டுரைகளும்

நூல்கள்

வின்சென்ட் ஆர்தர் சிமித் எழுதிய ஆக்சுபோர்டு இந்தியா வரலாறு நூலை, மோர்டிமெர் வீலருடன் இணைந்து ஏ. எல். பசாம் திருத்திய பதிப்பை வெளியிட்டார்.[3]

ஆய்வுக் கட்டுரைகள்
  • Basham, A. L. (October 1948). "Harṣa of Kashmir and the Iconoclast Ascetics". Bulletin of the School of Oriental and African Studies 12 (3-4): 140–145. doi:10.1017/S0041977X00083269.
  • Basham, A. L. (February 1949). "Recent Work on the Indus Civilization". Bulletin of the School of Oriental and African Studies 13 (01): 140. doi:10.1017/S0041977X00081891.
  • Basham, A.L. (1953). "A New Study of the Śaka-Kuṣāṇa Period". Bulletin of the School of Oriental and African Studies 15: 80–97. doi:10.1017/s0041977x00087279.
  • Basham, A.L. (February 1957). "The Succession of the Line of Kaniṣka". Bulletin of the School of Oriental and African Studies 20: 77. doi:10.1017/S0041977X00061693.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads