மைசூர் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

மைசூர் பல்கலைக்கழகம்
Remove ads

மைசூர்ப் பல்கலைக்கழகம் (University of Mysore) இந்தியாவின் கர்நாடகத்தில் மைசூரில் உள்ள ஓர் பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இது அந்நாளின் மைசூர் மகாராஜாவான நான்காம் கிருட்டிணராஜா உடையாரால் 27 சூலை 1916-இ ல் திறந்து வைக்கப்பட்டது. இது இந்தியாவில் உருவக்கப்பட்ட ஆறாவது பல்கலைக்கழகம் என்றும் கர்நாடகாவின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெயரினையும் பெற்றது.

விரைவான உண்மைகள் ஆங்கிலத்தில் குறிக்கோளுரை, வகை ...
Thumb
ஜெயலக்சுமி விலாசு மாளிகை, மைசூர் பல்கலைக்கழக அருங்காட்சியகம்
Remove ads

அறிமுகம்

Thumb
மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் கிரவ்போர்டு அரங்கம் - துணை வேந்தரின் அலுவலகம்

மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் ஆனது மைசூரில் அமைந்துள்ளது. இவ்வளாகத்தின் பெயர் மானச கங்கோத்திரி ஆகும். இதன் ஏனைய வளாகங்களில் அருகில் உள்ள ஹாசன், மாண்டியா மாவட்டங்களில் அமைந்துள்ளது. அண்ணளவாக 58, 000 மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றனர். 122 இணைக்கப்பட்ட கல்லூரிகளும் 49 அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுமையங்களும் இதனுடன் உள்ளன. இப்பல்கலைக்கழகமானது பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளுக்கான பாடதிட்டங்களை கலை, அறிவியலும் தொழில்நுட்பமும், சட்டம், கல்வி மற்றும் வர்த்தகம் தொடர்பான கற்கை நெறிகளில் வழங்குகின்றது.

Remove ads

வரலாறு

இது இந்தியாவின் ஆறாவது பழைய பல்கலைக்கழகமாகும். அத்துடன் கர்நாடகத்தில் உள்ள மிகப்பழைய பல்கலைக்கழகமும் இதுவேயாகும். இது 1916 ஆம் ஆண்டு மைசூர் மகாராஜா 6ஆம் கிருஷ்ணராஜ உடையாரால் டாக்டர் ரெட்டி மற்றும் தாமஸ் டென்ஹாம் அவர்களின் ஆலோசனையுடன் தொடங்கப்பட்டது.

உசாத்துணை

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads