ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார் (A. Y. S. Parisutha Nadar) இவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தஞ்சாவூர் தொகுதியில் இருந்து காங்கிரசு கட்சியின் வேட்பாளராக சென்னை மாகாணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையில் உறுப்பினராக இருந்தார். 1946, 1957 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில், இவர் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பிறப்பு
தஞ்சாவூரில் 1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி A.யாகப்ப நாடார் - ஞானம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு உடன்பிறந்த ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் உண்டு.
இவருடைய காலத்தில் தஞ்சை மக்கள் விவசாயத்தினை அதிகம் நம்பி இருந்தனர். வேறு தொழில்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பற்றாக்குறை அதிகம் இருந்தன. காமராஜர் ஆட்சி காலத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி உருவாக காரணமாக விளங்கினார்.[2]
கல்வி
தஞ்சாவூரின் புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் படிப்பை போல் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர்
இவர் 1946 ஆம் ஆண்டில் முதல் முறையாக சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1957,1967 ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், தஞ்சாவூர் சட்ட மன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1962ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு. கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.[3]
அரசியல் சட்ட அவையில்
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்திய அரசியலமைப்பின் கீழ் "சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்காக" ஜெரோம் டி சூசா என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்பு குழுவில் அங்கம் வகித்து அரிய பணியாற்றியிருக்கிறார்.
ராவ் சாகிப்
இவர் சிறப்பாக சமூக பணியாற்றியமைக்காக ராவ் சாகிப் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இறப்பு
14 மே 1985 ஆம் ஆண்டு தனது 76 வயதில் இறப்பெய்தினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads