ஏ. கே. மூர்த்தி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஏ. கே. மூர்த்தி (பிறப்பு: 12 சூலை 1964), பாட்டாளி மக்கள் கட்சியின் துணை பொது செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார், இவர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில்  மத்திய ரயில்வே துறை இணை  அமைச்சராக பதவி வகித்தார்.

விரைவான உண்மைகள் ஏ.கே. மூர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சி துணை பொது செயலாளர் ...

தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டத்தில் கீழ்மாம்பட்டு  என்ற சிறியகிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது பள்ளிப்படிப்பை சொந்த கிராமத்தில் முடித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் சென்னையில் சொந்தமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் வணிகம் மற்றும் போக்குவரத்து சேவைகள் தொடங்கினார்.

இந்நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது கட்சியை ஆரம்பித்திருந்தார். ஏ.கே.மூர்த்தி தனது அரசியல் வாழ்க்கையை ஒரு சாதாரண கட்சி உறுப்பினராக தொடங்கி  கட்சியின் துணை பொது செயலாளர் ஆனார். அவர் முதல் முறையாக 1999 இல் செங்கல்பட்டு  மக்களவை தொகுதியில்  பாமக சார்பாக போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 13 வது லோக் சபாவாகும்.[1]

ஏ. கே. மூர்த்தி 2002 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் தேதி  மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தார். சூலை 2ஆம் தேதி ரயில்வே இணை அமைச்சரானார். குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி இரயில்களில் தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகம் செய்தார்.

ஏ.கே.மூர்த்தி இரண்டாவது முறையாக 2004 ல் செங்கல்பட்டு மக்களவைத் தொகுதிக்கு போட்டியிட்டு, மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 14 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக  இருந்தார். இவர் 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஏ.கே.மூர்த்தி இரசாயன மற்றும் உரம் தயாரித்தல், கிராமப்புற மேம்பாடு, பொதுமக்களிடமிருந்து, சட்ட மற்றும் நீதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அவர் இந்த குழுக்களின் விவாதங்களில் தீவிரமாக பங்கு பெற்றார் மற்றும் ஏழைகளுக்காகவும், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும் குரல் கொடுத்தார். ஏ.கே.மூர்த்தி ஒரு  நாடாளுமன்ற உறுப்பினராக, தொடக்கக் கல்வி, பொது விநியோக முறை, கிராமப்புற போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads