ஆ. ப. வெங்கடேசுவரன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆயிலம் பஞ்சாபகேசன் வெங்கடேசுவரன் (Ayilam Panchapakeshan Venkateswaran, ஆகத்து 2, 1930 - செப்டம்பர் 3, 2014) இந்தியத் தூதுவரும், முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலரும்,[1] பெங்களூர் ஆசிய நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[2] இவர் இந்திய வெளியுறவுச் செயலர்களில் மிகவும் திறமை வாய்ந்தவராகக் கணிக்கப்பட்டார்.[3] 1987 ஆம் ஆண்டில் இவர் தனது பதவியில் இருந்து விலகியமை அக்காலத்தில் ஊடகங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது[4][5][6][7][8][9]

விரைவான உண்மைகள் ஏ. பி. வெங்கடேசுவரன்A. P. Venkateswaran, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

வெங்கடேசுவரன் கேரள மாநிலத்தில் பாலக்காட்டுக்கு அருகே உள்ள ஆயிலம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தந்தை பஞ்சாபகேச ஐயர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகப் பணியாற்றியவர்.[10] பின்னர் அரச அதிகாரியாகப் பணியாற்றியவர். ஒடிசாவில் இவர் பணியாற்றும் போது அங்கு பிறந்தவரே வெங்கடேசுவரன்.[10] வெங்கடேசுவரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்று அறிவியல், பொருளியல், அரசறிவியல் ஆகியவற்றில் பட்டப்பின் படிப்பை முடித்தார்.[11] 1952 ஏப்ரல் 2 இல் தனது 22வது அகவையில் இந்திய வெளியுறவுத்துறையில் சேர்ந்தார்.[10][12] பணியில் இருந்த காலத்தில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழ்கத்தில் பன்னாட்டு சட்டம் (1952-53) பயின்றார்.

Remove ads

சர்ச்சை

வெங்கடேசுவரன் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்ட சில காலத்தில், 1986 டிசம்பரில் இசுலாமாபாதில் இடம்பெற்ற ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில், வெங்கடேசுவரன் உரையாற்றுகையில், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, பாக்கித்தான் உட்பட சார்க் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளுவார் எனக் கூறியிருந்தார். இது குறித்து புதுதில்லியில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் பாக்கித்தான் செய்தியாளர் ஒருவர் ராஜீவ் காந்தியிடம் கேட்ட போது, ராஜிவ் காந்தி பின்வருமாறு பதிலளித்தார்:[4] "மிக விரைவில், நீங்கள் ஒரு புதிய வெளியுறவுச் செயலருடன் உரையாடலாம்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த வெங்கடேசுவரன்,[3] தனது பதவி விலகல் கடிதத்தை உடனடியாகவே பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பினார்.[10] இது உலக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.[4][6][13][14] பல ஆண்டுகளின் பின்னர், "அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது மிகப் பெரிய தவறு என்றும், இதுவே இறுதியில் ராஜீவ் காந்தி படுகொலைக்கு வழிவகுத்தது," என வெங்கடேசுவரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.[15]

Remove ads

பதவிகள்

வெஙகடேசுவரன் தென்னமெரிக்கா தவிர்த்து, உலகின் பல இடங்களிலும் இந்திய வெளியுறவுப் பணியகங்களின் பணியாற்றியிருந்தார்.[10] அமெரிக்கா, சீனா, சிரியா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றியுள்ளார்.[10] ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியப் பிரத்நிதியாகப் பணியாற்றிய பின்னர் 1986 இல் இந்தியா திரும்பினார். 1986 இல் இவர் வெளியுறவுச் செயலராக ராஜீவ் காந்தியினால் நியமிக்கப்பட்டார்.[10]

மேலதிகத் தகவல்கள் பணியகம், நிலை ...

1987 இல் அரசுப் பணியில் இருந்து பதவி விலகிய பின்னர், பெங்களூரில் ஆசிய மையம் என்ற பெயரில் தூதுவர்களுக்கும் அறிவாளிகளுக்குமான நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads