ஐகேட்

From Wikipedia, the free encyclopedia

ஐகேட்
Remove ads

ஐகேட் (முன்னாளில் ஐகேட் பட்னி, ஐகேட் க்ளோபல் சொலியூசன்ஸ் மற்றும் பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்சு) (முபச: 532517 , நாசுடாக்: PTI, நியாபச: PTI) என்பது தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாகும்.[2] இந்நிறுவனத்தில் சுமார் 18,000 நபர்கள் பணிபுரிகின்றனர். ஐகேட் பட்னி அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய - பசிப்பிக் பகுதிகள் உட்பட 23 நாடுகளில் தன்னுடைய பணிமனையை நிறுவியுள்ளது மட்டுமில்லாமல், இந்தியாவில் முக்கியமான எட்டு நகரங்களில் தன்னுடைய கிளைகளை கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு பார்ட்டியூன் 1000 நிறுவனங்களில் உள்ள சுமார் 360 நிறுவனங்கள் வாடிக்கையாளராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Remove ads

வரலாறு

நரேந்திர பட்னி என்பவரால் தொடங்கப்பெற்ற பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்சு என்னும் இந்நிறுவனம், இந்தியாவின் முதல் கணினி சார்ந்த சேவை வழங்கும் நிறுவனமாகும். நரேந்திர பட்னியின் தாரக மந்திரம்,

அதாவது,

என்ற கொள்கையை உடையவர், இந்தியாவின் முதல் கணினி சார்ந்த சேவையைத் துவங்கி, வெற்றிபெற்று அது உண்மையென்றும் உணர வைத்தார்.

ஆரம்பம்

1972-ம் ஆண்டு இந்நிறுவனம் "டேட்டா கன்வர்ஷன் இன்க்"("Data Conversion Inc") என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நரேந்திர பட்னி தன் மனைவி பூனத்துடன் இணைந்து, தங்களுடைய வீட்டிலிருந்து ஆரம்பித்தனர்.[4]

Remove ads

ஐகேட்டின் ஆக்கிரமிப்பு

ஐகேட் நிறுவனமானது, பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு ஜனவரி 10-ம் நாள் கைப்பற்றியது. அதன்பிறகு சுமார் 25,000 ஊழியர்களுடைய பெரிய நிறுவனமாக ஐகேட் உருவானது.

கிளைகள்

ஆசிய - பசிபிக் பகுதிகள்

வட அமெரிக்கா

தென் அமெரிக்கா

ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில்

பட்னி அறிவுப் பூங்கா, ஐரோலி, மும்பை

Thumb
ஐகேட் அறிவுப் பூங்கா, ஐரோலி, மும்பை
சுமார் 50 ஏக்கர்கள் (200,000 m2) நிலப்பரப்பில் அமைந்துள்ள இவ்விடம், நவி மும்பையின் அடையாளமாகத் திகழ்கிறது. இதில் ஒரே சமயத்தில் சுமார் 17,000 நபர்கள் வரை அமர முடியும்.[5]

பசுமை ஐடி - பிபிஓ, நொய்டா

Thumb
ஐகேட்டின் பசுமை கட்டிடம்

பசுமைப் புரட்சியை வலியுறுத்தும் வகையில்,[6] ரூபாய். 175 கோடிகள் செலவில் 5 ஏக்கர்கள் (20,000 m2) பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தில், அனைத்து வகையிலும் இயற்கை சார்ந்து, ஆற்றல், நீர் உள்ளிட்டவைகளை பாதுகாக்கும் வகையில் சுமார் 3500 நபர்கள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.[7]

விருதுகளும் அங்கீகாரமும்

  • 2008-ம் ஆண்டு ஐ. ஏ. ஓ. பி. உலகளாவிய சிறந்த 100 நூறு அவுட்சோர்சிங் என்னும் அயலாக்கம் செய்யும் நிறுவனங்களில் ஒன்று.[8]
  • காப்பீட்டு நிறுவனங்களுக்கு வணிகச் செயலாக்க அயலாக்கச் சேவை வழங்கும் சிறந்த 15 நிறுவனங்களில் ஒன்று.[9]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads