நொய்டா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நொய்டா (இந்தி: नोएडा, உருது: نوئڈا, உச்சரிப்பு: Noeḍâ) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். மாவட்டத்தில் மிக உயர்ந்த அரசாங்க அதிகாரி அலுவலகம், மாவட்ட நீதிபதி அலுவலகம் ஆகியவை நொய்டாவிலேயே உள்ளன. நொய்டா நகரம் நொய்டா-தத்ரி விதான் சபா (மாநில சட்டமன்ற) தொகுதியில் மற்றும் கவுதம் புத் நகர் மக்களவை (நாடாளுமன்ற) தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தியாவின் சுத்தமாக நகரங்களின் வரிசையில் நொய்டா 17 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.[1] பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் 2019-இல் நிறுவப்பட்டது. இவ்வூரில் புகழ்பெற்ற சுவாமி நாராயண் அக்சர்தாம் கோயில் உள்ளது.
Remove ads
பெயர் காரணம்
புதிய ஒக்லா தொழிற்துறை முன்னேற்றப் பகுதி எனப் பொருள்படும் ஆங்கில வார்த்தை New Okhla Industrial Development Area அல்லது New Okhla Industrial Development Authority என்பதிலிருந்து NOIDA எனப் பெயர் பெற்றது. 1976 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 17 ஆம் நாள் "நொய்டா தினம்" என்று நிர்வாக நடைமுறைக்கு வந்து இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
புவியியல் அமைவிடம்
நொய்டா உத்தர பிரதேச மாநிலத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நொய்டா புது தில்லிக்கு 20 கிலோ மீட்டர் (12 மைல்) தென்கிழக்கில் உள்ளது. நொய்டா யமுனா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கீழ் வருகிறது. காய்கறிகள், கரும்பு, கோதுமை போன்ற பணப் பயிர்கள், தேக்கு மற்றும் தானியங்கள் வளர ஏற்ற கரிசல் மண் கொண்டுள்ளது. நகரமயமாக்கலால் காய்கறிகள் மற்றும் பழங்கள் இப்போது முக்கிய பயிர்களாக உள்ளன.
பொருளாதாரம்




நொய்டா புறநகர் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதாலும் தில்லிக்கு நெருக்கம் என்பதாலும் பல நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் அவர்களின் இந்திய கிளை அலுவலகங்கள் இங்குள்ளன. மென்பொருள் துறையில் மேம்படுத்துவதற்கு இந்திய அரசால் நிறுவப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா தலைமை அலுவலகத்தை நொய்டா கொண்டிருக்கிறது.
இங்கு எச்.சி.எல், டெல், சி.எஸ்.சி, அடோப் போன்ற முன்னனி நிறுவனங்கள் உள்ளன.
நொய்டா ஒரு திரைப்பட நகரம் ஆகும். இங்கு முக்கிய செய்தி தொலைக்காட்சிகளான ஜீ நியூஸ், என்டிடிவி, ஐபிஎன், சிஎன்பிசி மற்றும் பல செய்தி தொலைக்காட்சிகள் இங்குதான் உள்ளன.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads