ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு

From Wikipedia, the free encyclopedia

ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு
Remove ads

மூன்றாம் சார்லசு (Charles III; சார்லசு பிலிப்பு ஆர்தர் ஜியார்ச்; பிறப்பு: 14 நவம்பர் 1948) ஐக்கிய இராச்சியத்தின் மன்னரும், ஏனைய 14 பொதுநலவாய இராச்சியங்களின்[a] மன்னரும் ஆவார். இவர் தனது தாயார் இரண்டாம் எலிசபெத் 2022 செப்டம்பர் 8 இல் இறந்ததை அடுத்து பதவிக்கு வந்தார். இவர் பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் முடிக்குரிய வாரிசாக இருந்தவரும், தனது 73-ஆவது அகவையில், பிரித்தானிய அரியணையை ஏற்கும் வயதான நபரும் ஆவார்.

விரைவான உண்மைகள் மூன்றாம் சார்லசு Charles III, ஆட்சிக்காலம் ...

சார்லசு பக்கிங்காம் அரண்மனையில் இவரது தாய்-வழிப் பாட்டன் ஆறாம் ஜியார்ச் மன்னரின் ஆட்சிக் காலத்தில் 1948 நவம்பர் 14 இல் பிறந்தார். சார்லசின் மூன்றாவது அகவையில், மன்னர் இறக்கவே தாயார் இரண்டாம் எலிசபெத் 1953 பெப்ரவரியில் அரியணை ஏறினார். இதனால் சார்லசு முடிக்குரிய வாரிசாக அறிவிக்கப்பட்டார். சார்லசு 1958 இல் வேல்சு இளவரசராக அறிவிக்கப்பட்டு, 1969 இல் வேல்சு இளவரசராக முடிசூடினார். அவரது தந்தை பிலிப்பு போல இவரும் கீம், கார்டன்சுடௌன் பள்ளிகளில் கல்வி கற்றார். பின்னர் ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் கோலோங் இலக்கணப் பள்ளியில் ஓராண்டு கல்வி கற்றார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, அரச வான்படையிலும் கடற்படையிலும் 1971 முதல் 1976 வரை பணியாற்றினார். 1981 இல், டயானாவைத் திருமணம் புரிந்தார், இவர்களுக்கு வில்லியம், ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர். 1996 இல், இவ்விணையர் நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட திருமணத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிறகு இருவரும் மணமுறிவு செய்தனர். அடுத்த ஆண்டு டயானா வாகன விபத்தொன்றில் இறந்தார். 2005 இல், சார்லசு தனது நீண்டகால நண்பரான கமிலா பார்க்கரை மறுமணம் புரிந்தார்.

வேல்சின் இளவரசராக, சார்லசு இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சார்பாக அதிகாரபூர்வமான பணிகளை மேற்கொண்டு வந்தார். 1976 இல் இளவரசர் அறக்கட்டளை என்ற இளைஞர் தொண்டு நிறுவனத்தை நிறுவினார், இதன் மூலம் 400 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு புரவலராகவும், தலைவராகவும், அல்லது உறுப்பினராகவும் உள்ளார். வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் கட்டிடக்கலையின் முக்கியத்துவத்திற்காகவும் பரப்புரை செய்தார்.[2] நவீன கட்டிடக்கலை விமரிசகரான சார்லசு, தனது கட்டிடக்கலை விருப்புக்கேற்ப பவுண்ட்புரி என்ற ஒரு புதிய சோதனை நகரத்தை உருவாக்குவதில் பணியாற்றினார். இவர் 20 இற்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர் அல்லது இணை ஆசிரியர் ஆவார். சுற்றுச்சூழல் ஆர்வலரான சார்லசு, கார்ன்வால் சிற்றரசின் தோட்டங்கலின் மேலாளராக இருந்த காலத்தில், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் இயற்கை வேளாண்மை நடவடிக்கைகளை ஆதரித்தார்,ஈதன் மூலம் சுற்றுச்சூழல் குழுக்களிடமிருந்து விருதுகள் வழங்கப்பட்டன.[3] மரபணு மாற்றப்பட்ட உணவை ஏற்றுக்கொள்வதைப் பற்றி அவர் ஒரு முக்கிய விமர்சகராக இருந்தார்.[4] ஓமியோபதி போன்ற மாற்று மருத்துவத்திற்கான சார்லசின் ஆதரவு விமர்சனத்திற்கு உட்பட்டது.[5][6][7] நன்கொடையாளர்களுக்கு பிரித்தானியக் குடியுரிமை வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவரது தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பிரின்சு அறக்கட்டளையின் நடத்தை விமர்சனத்துக்குள்ளானது; தற்போது, ​​இந்தத் தொண்டு நிறுவனம், பணம் பெற்று விருதுகள் வழங்கிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக பெருநகரக் காவல்துறையின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.[8]

2022 செப்டம்பர் 8 அன்று அவரது தாயார் இறந்த பிறகு சார்லஸ் மன்னரானார். 73 வயதில், பிரித்தானிய வரலாற்றில் வேல்ஸ் இளவரசராக நீண்ட காலம் பணியாற்றிய வாரிசாக இருந்து, பிரித்தானிய சிம்மாசனத்தில் சேரும் மூத்த நபர் ஆனார்.[9] இவரது முடிசூட்டு விழா 2023 மே 6 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் நடைபெற்றது.[10]

Remove ads

குறிப்புகள்

  1. "அவரது மாட்சிமை" என்று அழைக்கப்படும் தகுதியுள்ள மன்னன் என்பதால், அரசர் பொதுவாக குடும்பப் பெயரைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஒன்று தேவைப்படும்போது, அது மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்.[1]
Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads