ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் (Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR) என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய, 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.

ஜூன் 25, 1993 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் (48/141 விதிமுறைகளுக்கமைய) இவ்வாணையம் அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை ஜூலை 28, 2008ம் ஆண்டில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads