தென்னாப்பிரிக்கா
நாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்னாப்பிரிக்கா (South Africa) தென்னாப்பிரிக்கக் குடியரசு (RSA), என்பது ஆப்பிரிக்காவின் தென்முனையில் உள்ள நாடாகும். தெற்கே 2,798 கிலோமீட்டர்கள் (1,739 mi) ) வரையுள்ள இதன் வரம்புகள் அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வரை உள்ளது. [14] [15] [16] வடக்கே நமீபியா, போட்சுவானா, மற்றும் சிம்பாப்வே ஆகிய அண்டை நாடுகள் உள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கில் மொசாம்பிக் மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகள் உள்ளது. லெசோத்தோ நாட்டை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது . [17] பழைய உலகின் பிரதான நிலப்பரப்பில் தெற்கே அமைந்துள்ளதும் மற்றும் தான்சானியாவுக்குப் பிறகு பூமத்திய ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் உள்ளது . தென்னாப்பிரிக்கா ஒரு பல்லுயிர் மையமாக உள்ளது. இங்கு, தனித்துவமான பல்உயிர்த்தொகுதி, தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கே வசிக்கின்றனர். உலகின் 23-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும் மற்றும் 1,221,037 சதுர கிலோமீட்டர்கள் (471,445 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் பிரிட்டோரியா, ப்ளூம்பொன்டின் மற்றும் கேப் டவுன் ஆகிய மூன்று தலைநகரங்கள் உள்ளன, அவை முறையே நிர்வாக, நீதித்துறை மற்றும் சட்டப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரம் ஜோகானஸ்பர்க் ஆகும்.
Remove ads
சொற்பிறப்பியல்
"தென்னாப்பிரிக்கா" என்ற பெயர் ஆப்பிரிக்காவின் தென்முனையில் உள்ள நாட்டின் புவியியல் இருப்பிடத்திலிருந்து பெறப்பட்டது. நாடாக உருவானவுடன் ஆங்கிலத்தில் தென்னாப்பிரிக்கா என்றும் இடச்சு மொழியில், Unie van Zuid-Afrika என்றும் பெயரிடப்பட்டது. இது நாடாக உருவாவதற்கு முன்னர் தனியாக இருந்த நான்கு பிரித்தானியக் காலனியைக் குறிக்கிறது. 1961 முதல், ஆங்கிலத்தில் "தென்னாப்பிரிக்கா குடியரசு" என்றும் ஆபிரிக்கான மொழியில் Republiek van Suid-Afrika என்றும் அழைக்கப்படுகிறது . 1994 முதல், தென்னாப்பிரிக்காவின் 11 அதிகாரப்பூர்வ மொழிகள் ஒவ்வொன்றிலும் அதிகாரப்பூர்வ பெயரைக் கொண்டுள்ளது.
Remove ads
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல்

தென்னாப்பிரிக்கா உலகின் பழமையான தொல்பொருள் மற்றும் மனிதப் புதைபடிவ தளங்களைக் கொண்டுள்ளது. [18] [19] [20] கடெங் மாகாணத்தில் உள்ள குகைகளில் இருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பரந்த புதைபடிவ எச்சங்களை மீட்டுள்ளனர். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் இப்பகுதியினை, " மனிதகுலத்தின் தொட்டில் " என்றுகூறியது. ரேமாண்ட் டார்ட் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மனிதன் போன்ற புதைபடிவமான டாங் சைல்டை (டாங் அருகே காணப்படுகிறது) 1924 இல் அடையாளம் கண்டார்,
Remove ads
வெளிநாட்டு உறவுகள்
தென்னாப்பிரிக்கா ஐக்கிய நாடுகள் அவையின் (UN) நிறுவன உறுப்பினராக இருந்தது, பிரதமர் ஜான் இசுமட்சு ஐ.நா சாசனத்தின் முன்னுரையை எழுதினார். [21] தென்னாப்பிரிக்கா ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (AU) நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாகும், மேலும் அவையின்அனைத்து உறுப்பினர்களின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது .நிறவெறி முடிவுக்கு வந்த பிறகு, தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகளில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
புருண்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கொமோரோஸ் மற்றும் ஜிம்பாப்வே போன்ற ஆப்பிரிக்க மோதல்களில் தென்னாப்பிரிக்கா ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
நிர்வாக பிரிவுகள்

இங்கு ஒன்பது மாகாணங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒரு ஓரவை முறைமை கொண்ட சட்டமன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் கட்சி-பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. சட்டமன்றம் ஒரு பிரதமரை அரசாங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறது. மாகாண அரசாங்கங்களின் அதிகாரங்கள் அரசியலமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன; இதில் சுகாதாரம், கல்வி, பொது வீடுகள் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகள் அடங்கும்.
மாகாணங்கள் 52 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன: 8 பெருநகரங்கள் மற்றும் 44 மாவட்ட நகராட்சிகள் உள்ளன . மாவட்ட நகராட்சிகள் 205 உள்ளூர் நகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
Remove ads
பல்லுயிர்
தென்னாப்பிரிக்கா 4 ஜூன் 1994 இல் உயிரியல் பன்முகத்தன்மை குறித்த ரியோ மாநாட்டில் கையெழுத்திட்டது மற்றும் [25] நவம்பர் 1995இல் நடைபெற்ற மாநாட்டில் உறுப்பினரானது. அதன் பின்னர் தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தைத் தயாரித்தது, இது ஜூன் [26], 2006 அன்று மாநாட்டில் பெறப்பட்டது. உலகின் பதினேழு பெரும்பல்வகைமை நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது. [27]
சான்றுகள்
மேலும் படிக்க
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads