தக்காண சுல்தானகங்கள்

From Wikipedia, the free encyclopedia

தக்காண சுல்தானகங்கள்
Remove ads

தக்காணத்து சுல்தானகங்கள் (Deccan sultanates) என்பன தெற்கு மற்றும் நடு இந்தியாவில் ஆட்சி புரிந்த ஐந்து முஸ்லிம் பேரரசுகளைக் குறிக்கும். இவைகள் பிஜப்பூர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், அகமதுநகர் சுல்தானகம், பீதர் சுல்தானகம், பேரர் சுல்தானகம் ஆகியனவாகும். தக்காணத்து சுல்தானகங்கள் தக்காணத்து மேட்டுநிலப் பகுதியில் (Deccan Plateau), கிருஷ்ணா ஆறு மற்றும் விந்திய மலைத்தொடருக்கு இடையில் அமைந்திருந்தன. இவைகளில் பீஜாப்பூர், அஹ்மட்நகர், பெரார் ஆகியன 1490 இலும் பிடார், 1492 இலும் கொல்கொண்டா 1512 இலும் விடுதலை பெற்ற தனி அரசுகளாயின. 1510 இல் பீஜாப்பூர் கோவா நகரில் போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பை முறியடித்தனர் ஆயினும் பின்னர் அதே ஆண்டின் இறுதியில் அந்நகரத்தை இழந்தனர்.

Thumb
தக்காணத்து சுல்தானகங்கள்

இவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டைகளில் ஈடுபட்டிருந்தாலும். 1565 இல் விஜயநகரப் பேரரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போர் புரிந்து தலைக்கோட்டை சமரில் தோற்கடித்து விஜயநகரை நிரந்தரமாக வீழ்ச்சியடையச் செய்தனர். 1574 இல் பெராரில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் அஹ்மட்நகர் இதனைக் கைப்பற்றியது. 1619 இல் பிடார் பீஜாப்பூருடன் இணைக்கப்பட்டது. இந்த சுல்தானகங்களை பின்னர் முகலாயப் பேரரசு கைப்பற்றியது. 1596 இல் பெரார் அஹ்மட்நகரில் இருந்து விடுவிக்கப்பட்டது. அஹ்மட்நகர் 1616 க்கும் 1636 க்கும் இடையில் முற்றாகக் கைப்பற்றப்பட்டது. கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் பீஜப்பூர் சுல்தானகம் ஆகியன அவுரங்கசீப்பினால் 1686-7 இல் கைப்பற்றப்பட்டன.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads