ஐரோவாசிய மலைமூக்கான்
பறவை இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலை மூக்கான் (Eurasian woodcock) என்பது மிதவெப்ப மண்டல மற்றும் துணையார்க்டிக் ஐரோவாசியாவில் காணப்படும் ஒரு நடுத்தர-சிறிய அளவிலான பறவையாகும். சிவப்பும், பழுப்பும் கலந்த உடலின் மேற்பகுதியும், பழுப்பு கலந்த மஞ்சள் நிறம் கொண்ட கீழ்ப்பகுதியும் இப்பறவையின் வாழ்விடத்திற்கு ஏற்ற ஒரு உருமறைப்பாக உள்ளது. இதன் பார்வை 360 பாகை கொண்டதாக உள்ளது. அதற்கு வசதியாக இதன் கண்கள் உயரப் பின் தள்ளி அமைந்துள்ளன. மேலும் இதன் நீண்ட, உணர்திறன் கொண்ட அலகு மூலம் உணவுக்காக சேற்றில் துழவாவுகின்றது. நிலம் உறைந்திருக்கும் போது குளிர்ந்த காலநிலையில் அது பாதிக்கப்படும்.
வசந்த காலத்தில் அந்தி சாயும் நேரத்தில் காதலூடாட்ட விளையாட்டுகளை செய்தபடி ஆண் பறக்கிறது. பெண் பறவைகள் பறக்கும் போது சில சமயங்களில் குஞ்சுகளை தன் கால்களுக்கு இடையில் சுமந்து செல்லும் என்று பரவலாக நம்பப்படுகிறது, இருப்பினும் இதற்கான சான்றுகள் முற்றிலும் இல்லை. உலகில் இந்தப் பறவைகளின் எண்ணிக்கை 14 மில்லியன் முதல் 16 மில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Remove ads
விளக்கம்
முதிர்ந்த பறவைகள் 33–38 cm (13–15 அங்) நீளமும் அதில், 6–8 cm (2.4–3.1 அங்) நீண்ட நேரான அலகும் கொண்டிருக்கும். மேலும் 55–65 cm (22–26 அங்) நாளமான இறக்கைகள் கொண்டவை. மலை மூக்கான் அதன் வனப்பகுதி வாழ்விடத்திற்கு ஏற்றவாறு உருமறைப்பைக் கொண்டுள்ளது. இதன் கண்கள் தலையில் உயரப் பின் தள்ளி அமைந்து உள்ளது. இது 360 பாகை ஒற்றைக்கண்ணர் பார்வையை அளிக்கிறது.
இதன் இறக்கைகள் வட்டமானது. மேலும் இதன் அலகின் அடிப்பகுதி கருமையான முனையுடன் சதை நிறத்தில் இருக்கும். இதன் கால்கள் சாம்பல் நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு வரை மாறுபடும். இந்த இனம் பால் ஈருருமை கொண்டது. ஆண் பறவை பெண் பறவையை விட பெரியது. இருப்பினும் பாலினங்களை புலத்தில் பிரித்தறிய முடியாது.
Remove ads
பரவலும் வாழ்விடமும்
உலகின் மூன்றில் ஒரு பங்கு ஐரோவாசியா மலை மூக்கான்கள் இனப் பறவைகள் ஐரோப்பா கண்டத்தில் உள்ளன. கண்டத்தில் உள்ள 90%க்கும் அதிகமான பறவைகள் உருசியா மற்றும் ஃபெனோஸ்காண்டியாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் இனப்பெருக்கம் ஃபெனோஸ்காண்டியாவிலிருந்து நடுநிலக் கடல் மற்றும் கேனரி தீவுகள் மற்றும் மேற்கு ஐரோப்பாவிலிருந்து உருசியா வரை நீண்டுள்ளது. அசோரசில் உள்ள பறவைகள் ஐரோப்பாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக இவற்றிற்கிடையே நுட்பமான மரபணு வேறுபாடு ஏற்பட்டுள்ளது.[2]
இது மிதவெப்ப மண்டல மற்றும் துணையார்டிக் ஐரோவாசியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் மலை மூக்கான் ஆகும். வடக்கு மற்றும் ஆசியாவில் இனப்பெரும் செய்யும் பறவைகள் முறையே தெற்கு ஐரோப்பா அல்லது இந்திய துணைக்கண்டத்திற்கு வலசை போகின்றன . மிதவெப்ப மண்டல
மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அட்லாண்டிக் தீவுகளில் இந்தப் பறவைகள் வசிக்கின்றன. வடமேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் வலசை போவதில்லை. பறவைகளின் வசந்தகால இடம்பெயர்வு பிப்ரவரியில் தொடங்குகிறது; இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளை மார்ச் மற்றும் மே மாதங்களில் அடைகின்றன. மலை மூக்கானின் வசந்த கால இடம்பெயர்வானது வானிலை நிலைமைகளால் பாதிக்கப்படுகின்றது. இருப்பினும் இது அவற்றின் அடுத்தடுத்த இனப்பெருக்கப் பணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.[3]

ஐரோவாசியன் மலை மூக்கான் பெரிய ஒரு வாழிட எல்லையைக் கொண்டுள்ளது. உலகளாவிய அளவில் 10 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் வாழும் இவை 15 மில்லியன் முதல் 16 மில்லியன் வரையிலான எண்ணிக்கை வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பெரிய வாழிட எல்லை, பெரிய அளவிலான எண்ணிக்கை அளவு ஆகியவற்றின் காரணமாக, இந்த இனங்கள் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோவாசிய மலை மூக்கான் இனப்பெருக்கம் செய்யும் பகுதியில் இவற்றிற்கு மிக முக்கியமான அச்சுறுத்தலாக இருப்பது இதன் வனப்பகுதி துண்டாடப்படுதல் அதிகரித்து வருவதாகும். மேலும் ஆண்டின் பிற காலங்களில் இவை வாழும் பகுதிகளான நிரந்தர புல்வெளிப் பகுதிகளின் அளவு குறைவதும், விவசாய நிலங்கள் தீவிரமாக அதிகரிப்பதும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளன. மேலும் பறவைக் காய்ச்சலுக்கு இந்த இனங்கள் எளிதில் பாதிக்கப்படுவது எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
Remove ads
நடத்தை
ஐரோவாசிய மலை மூக்கான்கள் விடியலிலும் அந்தி வேளையிலும் மிகவும் சுறுசுறுப்பாக இரைதேடு. பகலில் அரிதாகவே இரைதேடும். இவை ஆந்தை- அல்லது வௌவால் போன்ற ஓரளவு பறக்கும் தன்மை கொண்டவை. மலை மூக்கான் இடம்பெயரும் போது அதாவது திறந்த வெளியைக் கடக்கும்போது வேகமாகவும் நேரடியாகவும் பறக்கும், ஆனால் வனப்பகுதியில் முறுக்கியும் படபடப்புடனும் ஒழுங்கற்ற முறையில் பறக்கும். இவை பொதுவாக தனித்தனியாகவே இடம்பெயர்கின்றன, ஆனால் வானிலை அல்லது புவியியல் சூழ்நிலைகளினால் இவை ஓன்றாக கூடலாம்.
இனப்பெருக்கம்

ஆண் பறவை ஏப்ரல் மற்றும் சூன் மாதங்களுக்கு இடையில் அந்தி சாயும் நேரத்தில் காதல் ஊடாட்டத்துடன் பறந்து நிகழ்த்துகிறது. அப்போது இனச்சேர்கைக்கானக ஒலி எழுப்புகிறது. ஆண் யூரேசியன் மலை மூக்கனின் குரல் அலைகளை செய்த ஆய்வில், 95% அழைப்புகள் தனிப்பட்ட பறவைகளை நோக்கி அழைக்கபட்டதாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. மேலும் பறக்கும் ஆண் பறவைகளைக் கணக்கிடுவது இவற்றின் எண்ணிக்கையைக் கண்காணிக்க பொருத்தமான முறை என்று முடிவு செய்யபட்டுள்ளது. பிரிட்டன்,[4] சுவிட்சர்லாந்து,[5] பிரான்ஸ் [6] உருசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இதன் எண்ணிக்கையை மதிப்பிட இம்முறையை இப்போது பயன்படுத்துகின்றன.[7]
இது வனப்பகுதி அல்லது புதர்களிடேயே தரையில் கூடு கட்டுகின்றது. தரையில் உதிர்ந்த இலை தழைகளால் மெத்தென்று ஆக்கி கூடு அமைக்கிறது. இது வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறப் புள்ளிகள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு வெள்ளை முட்டைகளை இடும். 21 முதல் 24 நாட்கள் வரை பெண் பறவையால் அடைகாக்கபடும். முட்டைகளின் அளவு 44 mm × 34 mm (1.7 அங் × 1.3 அங்) மற்றும் எடை 26.5 g (0.93 oz), இதில் 5% ஓடு ஆகும். குஞ்சு பொரித்து வெளிவந்த குஞ்சுகள் 15-20 நாட்களுக்குப் பிறகு பறந்து செல்கின்றன, என்றாலும் 10 நாட்களுக்குப் பிறகு அவற்றில் குறுகிய தூரம் பறக்க முடியும். அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, தாய் பறவை தனது கால்கள், உடல் மற்றும் வால் இடையே, தனது நகங்கள் அல்லது முதுகில் சிறிய குஞ்சுகளை சுமந்து கொண்டு பறக்கும். இந்த நடத்தை அரிதாகவே காணப்படுகிறது.
உணவு
ஐரோவாசியன் மலை மூக்கான், பொதுவாக யாரின் கண்ணிலும் படாதவாறு நன்கு மறைந்திருந்தவாறு முட்காடுளில் மென்மையான மண்ணில் உணவு தேடும். இவை முக்கியமாக மண்புழுக்களை உண்கின்றன. ஆனால் பூச்சிகள் மற்றும் அவற்றின் குடம்பிகள், நன்னீர் மெல்லுடலிகள், சில தாவர விதைகளையும் சாப்பிடுகின்றன. இவை உணவைக் கண்டுபிடிக்க தரையை கிளறுவதை நம்பியிருப்பதால், தரை உறைந்திருக்கும் போது இவை குளிர் குளிர்கால வானிலையால் பாதிக்கப்படுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads