ஐ. எம். டி. பி இணையத்தளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐ. எம். டி. பி (IMDb) இவ்விணையத்தளம் ஆனது உலக திரைப்படங்களினைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கும் தளமாக விளங்குகின்றது. மேலும் இவ்விணையத்தளத்தினை இலவசமாகப் பயனர் பகுதியை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புகளும் உண்டு. உலகளவில் திரைப்படங்களிற்காகப் பார்க்கப்படும் தளங்களில் இத்தளம் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] மிகப் பெரிய பட விநியோக நிறுவனங்களான பாராமவுண்ட், யுனிவெர்சல், பாக்ஸ் பிக்சர்ஸ், வார்னர் ப்ரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்றவை தங்களது படங்களைப் பற்றி அவர்களே தகவல்களை இந்த தரவுத் தளத்தில் உள்ளீடு செய்வார்கள்.[1][2][3]
சிறிய படங்கள் பற்றிய தகவல்களை, பார்வையாளர்களும் ரசிகர்களும் உள்ளீடு செய்யலாம். ஆனால் நீங்கள் அந்தப் படத்தின் புகைப்படங்கள், டிரைலர்களை தரவேற்ற விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் படத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும் தர வேண்டும்.
Remove ads
சிறப்பான விஷயங்கள்
புதிதாகப் பயனர் கணக்கை ஏற்படுத்திய பின்னர்:
- நமக்குப் பிடித்தமான திரைப்படங்களின் புள்ளிகளை நாமே விரும்பியபடி வழங்கலாம்.இவ்வாறு நாம் வழங்கும் புள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு அத்திரைப்படத்தினை உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள மக்களால் வரவேற்கப்படுமாறு செய்யலாம்.மேலும் அவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு சிறந்த திரைப்படமாகத் தோன்றும் திரைப்படங்கள் உலக மக்களாலும் ரசிக்கப்படலாம்.
- நாம் இதுவரை காலங்களும் பார்த்து ரசித்த திரைப்படங்களினை ஒரு பட்டியலாகச் சேகரித்து பின்னர் நமது விருப்பத்திற்கேற்றாற் போல புள்ளிகளை வழங்கலாம்.
- மேலும் நாம் பார்த்த படங்களின் விமர்சனங்களையும் எழுதலாம்.
Remove ads
பிற விபரங்கள்
சர்வதேச சந்தைப்படுத்துதலை இந்தத் தளம், மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தும் படங்களின் இறுவட்டு விற்பனையை, தனது தாய் தளமான அமேஸான் மூலம் ஊக்குவிக்கிறது அல்லது இறுவட்டு வாடகைக் கடைகளைப் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியுள்ளன.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads