ஒட்டர்
சாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒட்டர் (Oddar, Vodra, Odde, Bhovi, or Waddar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வாழுகின்ற தெலுங்கு பேசும் இனக்குழுவினர் ஆவார்.[1]

இச்சமூகத்தினர் போயர், பண்டி, கொட்டா இனத்தவர்களை ஒத்திருக்கின்றனர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஒடிசாவில் இருந்து தமிழகம் வந்தனர்.[2][3] அந்த காரணத்தால், இச்சமூகத்தினர் ஒட்டர் என அழைக்கப்படுகின்றனர்.[4] இச்சமூகத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[5] ஒட்டர், போயர் சமூக மக்களுக்கு பண்டி, கொட்டா என்ற சாதிச்சான்று வழங்கி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பண்டி, கொட்டா சமுதாய மக்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.[6]
Remove ads
பெயர்கள்
ஒட்டர் சமூகம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவை கல் ஒட்டர், மண் ஒட்டர், மரம் ஒட்டர், உப்புர ஒட்டர், சூரா மாரி ஒட்டர்கள், பெத்த போயர், ஒட்ராஜ்புத், சூரிய குல சத்திரியர், சந்திர குல சத்திரியர், போயர்.[7]
தொழில்
இவர்கள் கல் உடைத்தல், கட்டிட வேலைகள், செங்கல் தயாரித்தல், சுண்ணாம்பு தயாரிக்கும் மூலங்கள் வெட்டுதல், அணைகள் கட்டுதல், போன்ற பணிகளை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads