ஒர்து மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

ஒர்து மாகாணம்
Remove ads

ஒர்து மாகாணம் (Ordu Province துருக்கியம்: Ordu ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியியல் கருங்கடல் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. அதன் அருகிலுள்ள மாகாணங்களாக வடமேற்கில் சாம்சூன் மாகாணம், தென்மேற்கில் டோகாட் மாகாணம், தெற்கே சிவாஸ் மாகாணம் மற்றும் கிழக்கில் கீரேசன் மாகாணம் ஆகியன உள்ளன. அதன் வாகன பெயர்பலகை குறியீட்டு எண் 52 ஆகும். இந்த மாகாணத்தின் தலைநகரமாக ஒர்து நகரம் உள்ளது.

விரைவான உண்மைகள் ஒர்து மாகாணம் Ordu ili, நாடு ...
Remove ads

சொற்பிறப்பு

ஒர்து என்பது தற்போதைய துருக்கிய மொழியில் 'இராணுவம்' என்ற சொல்லாகும், முதலில் 'இராணுவ முகாம்' என்று பொருள்படும், ஒட்டோமான் பேரரசின் போது இன்றைய நகரத்திற்கு அருகில் ஒரு இராணுவ புறக்காவல் அமைக்கப்பட்டது. இதிலிருந்து நகரமும், பின்னர் மாகாணம், இந்தப் பெயரைப் பெற்றன.

ஒர்து பகுதியில் உள்ள கருங்கடல் கடற்கரை மற்றும் அதன் பின்னால் உள்ள மலைகள், வரலாற்று ரீதியாக உள்ள விவசாய மற்றும் மீன்பிடி பகுதிகள் போன்றவற்றால் அண்மைய ஆண்டுகளில், சுற்றுலா அதிகரித்துள்ளது. முக்கியமாக உருசியா மற்றும் சியார்சியாவிலிருந்து கணிசமாக வருகிறார்கள். இப் பயணிகள் ஒர்துவின் கருங்கடல் கடற்கரையில் உள்ள சில சிறந்த கடற்கரைகள், ஆறுகள் மற்றும் பசுமையான மலைகள், உயர் மேய்ச்சல் நிலங்களில் நடப்பது போன்றவை துருக்கிய விடுமுறை நாட்களில் பிரபலமான பயணமாகும். அதிக உயரமான இடங்களில் காடுகள் உள்ளன.

மெலட் ஆறு, போலமன் ஆறு, எலெகாய் ஆறு, டர்னாசுயு நீரோடை, அகோவா நீரோடை மற்றும் சிவில் நீரோடை ஆகியவை மாகாணத்தில் பாயும் முக்கிய ஆறுகள் ஆகும். மாகாணத்தின் நில அமைப்பு ஏரிகள் உருவாவதற்கு ஏற்றவை அல்ல, காகா ஏரி மற்றும் உலுகல் ஏரி ஆகிய இரண்டு பெரிய ஏரிகள் மட்டுமே ஒர்துவில் உள்ளன.

Remove ads

பொருளாதாரம்

மாகாணத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் வேளாண்மையை அடிப்படையைக கொண்டது ஆகும். ஒர்துவில் ஹேசல்நட்ஸ் ( குறுமர வகையின் உணவாகக் கொள்ளத்தக்க செம்பழுப்பு நிறக் கொட்டை ) பிரபலமானது . ஒட்டுமொத்தமாக துருக்கி உலகின் ஹேசல்நட்ஸில் 70 சதவிகிதத்தை உற்பத்தி செய்கிறது,[2] மற்றும் துருக்கியின் முக்கிய உற்பத்தியாளராக ஒர்து உள்ளது, இது ஆண்டுக்கு 150,000-180,000 டன்கள் உற்பத்தி செய்கிறது. இது துருக்கியின் மொத்த உற்பத்தியில் 30% ஆகும். ஹேசல்நட்ஸ் உற்பத்தி ஒர்துவின் விளைநிலங்களில் 88% பயிரிடப்படுகின்றன. மீதமுள்ள விளை நிலங்களில் முக்கியமாக சோளம் மற்றும் கோதுமை வயல்களாக உள்ளன. மாகாணத்தின் விளைநிலங்களில் 0.1% மட்டுமே உள்ளடக்கியுள்ள நிலையில், ஒர்துவின் கிவி உற்பத்தி யலோவாவுக்குப் பிறகு நாட்டில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. துருக்கியில் உற்பத்தி செய்யப்படும் தேனில் 12.8% இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒர்துவிலும் தேனீ வளர்ப்பு என்பது ஒரு முக்கியமான தொழிலாக உள்ளது.[3]

Remove ads

மக்கள்வகைப்பாடு

இந்த மாகாணத்தில் பெரும்பாலும் செப்னி துருக்கியர்கள் மற்றும் பிற ஓகுஸ் துருக்கியர்கள் வாழ்கின்றனர். மேலும் இந்த மாகாணம் சிறுபான்மையினரான செவனேபுரி ஜார்ஜியர்களின் தாயகமாகும் .[4]

சமீபத்திய தசாப்தங்களில், ஒர்துவிலிருந்து பலர் துருக்கியியன் இசுதான்புல், புர்சா, சாம்சூன், சாகர்யா போன்ற நகரங்களுக்கோஅல்லது வெளிநாடுகளுக்கோ வேலைக்காக குடிபெயர்ந்துள்ளனர்.

மாவட்டங்கள்

ஒர்து மாகாணம் 19 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள்

ஒர்து மாகாணமானது அழகிய விரிகுடாக்கள் மற்றும் கருங்கடல் பகுதியில் நீளமான தூய்மையான கடற்கரைகளைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க தளங்கள் பின்வருமாறு:

  • ஒர்து நகரில் உள்ள ரஷ்ய பஜார்
  • போஸ்டீப் - 460 மீ. உயரத்தில் உள்ள நகரம்.
  • கராகல் - சாம்பா பீடபூமியில் 3107 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு பிளவு ஏரி.
  • யேசன் (ஜேசன்) சிகரம் - பெரம்பேவில் ஒரு தலைப்பகுதி
  • Çambaşı Yaylası ஒரு உயர் பீடபூமி

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads