ஒலிவர் வில்லியம்சன்

From Wikipedia, the free encyclopedia

ஒலிவர் வில்லியம்சன்
Remove ads

ஒலிவர் ஈட்டன் வில்லியம்சன் (Oliver Eaton Williamson, பிறப்பு: செப்டம்பர் 27, 1932) என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற பொருளியலாளர், பேராசிரியர். 2009 ஆம் ஆண்டில் இவருக்கு பொருளியலில் நோபல் நினைவுப் பரிசு மற்றொரு அமெரிக்கரான எலினோர் ஒசுட்ரொம் என்பவருடன் சேர்த்து வழங்கப்பட்டது. சந்தைச் செயற்பாடுகளான மூலப்பொருட்களின் விநியோகம் மற்றும் உற்பத்தி போன்றவை, ஒற்றை நிறுவனத்தின் உள்ளே மேற்கொள்ளப்படுகின்ற போது எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமைகின்றன என்பதை ஆய்வு செய்ததற்காக வில்லியம்சனுக்கு பொருளியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது[1].

விரைவான உண்மைகள் தேசியம், நிறுவனம் ...

வில்லியம்சன் தனது பட்டப்படிப்பை முகாமைத்துவத் துறையில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் 1955இல் பெற்றார். முதுகலாஇமாணிப் பட்டத்தை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1960 இலும், முனைவர் பட்டத்தை 1963 இல் கார்னெஜி மெலன் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 1965 முதல் 1983 சரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் 1988 முதல் பேராசிரியராகப் பணியாற்றி, தற்போது ஹாஸ் வர்த்தகக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

Remove ads

மேற்கோள்ள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads