ஒகினவா சண்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐஸ்பெர்க் நடவடிக்கை (Operation Iceberg) என்று குறிப்பெயரிடப்பட்ட ஒகினவா சண்டை (Battle of Okinawa) யப்பானிய ஒகினவா தீவுகளில் இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போரின் ஒரு அங்கமாக நடைபெற்ற மிகப்பெரிய ஈருடகச் சண்டையாகும்.[1] 1945 ஆம் ஆண்டின் மார்ச் கடைசி முதல் யூன் மாதம் வரை நடைபெற்றது.
இச்சண்டையில் பாவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளின் செறிவு, கப்பல்களின் எண்ணிகை, கவச வண்டிகள் போன்றவை காரணமாக இச்சண்டை ஆங்கிலத்தில் டைப்பூன் ஃச்டீல் (Typhoon of Steel; இரும்பு சுறாவளி) யப்பானிய மொழியில் தெற்சுனோ அமே (இரும்பு மழை) என அழைக்கப்பட்டது. சண்டையின் முன்னர் ஒகினவாவில் 435,000 பேர் வசித்தனர் இவர்களில் 75,000 முதல் 140,000 இச்சண்டைகளின் போது கொல்லப்பட்டனர்.[2]
நேச நாடுகள் யப்பான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையான டவுன்ஃபோல் நடவடிக்கையின் (Operation Downfall) தொடக்கப்புள்ளியாக ஒகினவாவை பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன. இருப்பினும் டவுன்ஃபோல் நடவடிக்கையில் முன்னராக ஒகினவா சண்டையை தொடர்ந்து இரோசிமா, நாகசாகி நகரங்கள் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல், இரசியா யப்பான் மீது போர் பிரகடனப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் காரணமாக யப்பான் சரணடைந்ததன் காரணமாக இரண்டாம் உலகப்போர் முடிவுற்றது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads