ஓமம்

From Wikipedia, the free encyclopedia

ஓமம்
Remove ads

ஓமம் (Trachyspermum copticum) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும்.[3] விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.

விரைவான உண்மைகள் ஓமம், உயிரியல் வகைப்பாடு ...
Thumb
ஓமம்
Remove ads

மருத்துவ குணங்கள்

தீரும் நோய்கள்: மூக்கடைப்பு (Running nose), பீனிசம் போன்ற சீதளத்தால் உண்டாகின்ற அறிகுறிகளைப் போக்க வல்லது. வலி நிவாரணியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்றவை நீக்கவும் பயன்படுகிறது. ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

சத்துக்கள்

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

பயன்பாடுகள்

ஓமம் (Carom Seeds), சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெற்று விளங்கும் இது, இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிற ஒரு மூலிகைச் செடிவகையாகும். மருத்துவ குணங்கொண்ட இத்தாவரத்தை, வெதுப்பி (Bread), மாற்றும் அணிச்சல் (Cake) தயாரிக்கவும், மதுபான வகைகளுக்கு மணமூட்டவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads