ஓம்சுக் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓம்சுக் மாகாணம் (Omsk Oblast, உருசியம்: О́мская о́бласть, ஓம்ஸ்கயா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக மையம் ஓம்ஸ்க் ஆகும். இந்த மாகாணம் 139.700 சதுர கிலோமீட்டர் (53,900 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் மக்கள் தொகை 1,977,665 ( 2010 கணக்கெடுப்பு )[5] ஆகும். இதில் பெரும்பான்மையினரான 1.15 மில்லியன் மக்கள் நிர்வாக மையமான ஒம்ஸ்க் நகரத்திலேயே வாழ்கின்றனர். இதன் எல்லைகளாக வடக்கிலும், மேற்கிலும் தியூமென் ஒப்லாஸ்து, கிழக்கில் நோவஸிபிர்ஸ்க் மற்றும் தோம்ஸ்க் ஒப்லாஸ்து ஆகியவையும், தெற்கில் கசக்ஸ்தான் ஆகியவை அமைந்துள்ளன.
Remove ads
வரலாறு
தொல்லியல் கண்டுபிடிப்புகள்படி இந்த ஒப்ளாஸ்ட் பகுதியில் கடந்த 14,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் வசித்து வந்தனர் என்று சுட்டிக் காட்டுகின்றனர். புதிய கற்கால மக்கள் இப்பகுதியில் மீன் பிடித்து, வேட்டையாடி வாழ்ந்துவந்தனர். சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் இங்கு நிலையாக ஓரிடத்தில் வாழத் தொடங்கினர். பல்வேறு துருக்கிய நாடுகளின் ஆதிக்கத்தில் இப்பகுதி இடைக்கால சகாப்தம் முழுவதும் இருந்தது. இப்பகுதியில் ரசிய வரலாறு என்பது 1584இல் துவங்குகிறது. யேர்மார்க் என்பவரின் தலைமையிலான படைகள் இப்பகுதியின் உள்ளூர் ஆட்சியாளர்களைத் தோற்கடித்து இப்பிராந்தியத்தை இரசியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
Remove ads
பொருளாதாரம்
2008 ஆம் ஆண்டில் இருந்து, ஒம்ஸ்க் ஒப்லாஸ்து இரசியாவின் பிராந்தியங்களில் பொருளாதாரத்தில் 23வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பிராந்தியத்தின் மொத்த உற்பத்தி 10.2 பில்லியன் டாலர்கள் மதிப்பைக் கொண்டுள்ளது. ஒம்ஸ்க் ஒப்லாஸ்தின் தொழில் துறை நன்கு முன்னேறியுள்ளது. சேவைத்துறை, நிதித் துறைகள் மேலும் வளர்ந்து வருகின்றது, வேளாண்மை பொருளாதாரத்தில் சிறிய பங்கையே வகிக்கிறது என்றாலும், குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இப்பிராந்தியத்தில் அறுபத்தாறாயிரம் தனியார் நிறுவனங்கள் பதிவுபெற்றுள்ளன. இவற்றில் சிறுதொழில் விற்பனையாளர்கள் முதல் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலானஉற்பத்தியாளர்கள்வரை உள்ளனர்.[9] 2008 ஆம் ஆண்டு போர்ப்ஸ் இதழ் இரசியாவின் சிறந்த நகரங்களில் ஒம்ஸ்க்க்கு ஆறாவது இடத்தைத் தந்தது. அதற்கு முந்தைய ஆண்டு தரவரிசையில் 20 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.[10]
Remove ads
புவியியல்
ஒம்ஸ்க் ஒப்லாஸ்து வடக்கில் இருந்து தெற்காக 600 கி.மீ. நீளமும் கிழக்கிலிருந்து மேற்காக 300 கி.மீ. வரை பரவியுள்ளது. ஒப்ளாஸ்ட் புவியியல் லிர்டிஷ் ஆறும் அதன் கிளை ஆறுகளுமே பெரும்பங்கு வகிக்கிறன. இது மேற்கு சைபீரியாவன் ஒரு பகுதியாக உள்ளது. ஒப்ளாஸ்ட்டின் தெற்குப் பகுதி பெரும்பாலும் புல்வெளியாகவும் படிப்படியாக மரங்களடர்ந்த சமவெளிக் காடுகளைக் கொண்டதாகவும் உள்ளது. வடக்கில் சதுப்புநில தைகா காடுகள் உள்ளன.
காலநிலை
ஒப்ளாஸ்ட் உன்னதமான வெப்பநிலையைக் கொண்டுள்ளது. குளிர், பனி மழை, வெப்பம் மற்றும் வறண்ட கோடைக் காலம் என வேறுபட்ட தட்பவெப்பநிலையைக் கொண்டதாக உள்ளது, சராசரி சனவரி வெப்பநிலை -42 ° செமுதல் -30 ° செ வரையும், சராசரி சூலை வெப்பநிலை +28° செ இருந்து + 25 ° செ வரையும் சிலசமயம் 35 ° செ இல் இருந்து 40 ° செ வரை வரைகூட அடையும். சராசரி ஆண்டு மழைப் பொழிவு 300-400 மி.மீ. ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 1,977,665 ( 2010 கணக்கெடுப்பு ); 2,692,251 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 2,782,005 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
2012 முக்கிய புள்ளி விவரங்கள்
- பிறப்பு: 29 475 (1000 ஒன்றுக்கு 14.9)
- இறப்பு: 27 197 (1000 ஒன்றுக்கு 13.8) [11]
- மொத்த கருத்தரிப்பு விகிதம்[12]:
2009 - 1.58 | 2010 - 1.60 | 2011 - 1.66 | 2012 - 1.86 | 2013 - 1.87 | 2014 - 1.96 (இ)
2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இனக்குழுக்கள் விகிதம்:[5]
- 85.8% ரஷியன்
- 4.1% கசாக்
- 2.7% உக்ரைனியர்
- 2.6% ஜெர்மன்
- 2.2% டாடர்
- 0.3% பெலாரஷ்யர்கள்
- 0.4% ஆர்மேனியர்
- பிற இனக்குழுவினர் ஒவ்வொன்றிலும் இரண்டாயிரம் பேருக்கும் குறைவாக இருக்கலாம்.
- 57.518 பேர் மக்கள் பதிவுகளில் தங்கள் இனத்தை அறிவிக்காதவர்கள் ஆவர்.[13]
Remove ads
மதம்
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி ஒம்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 35.7% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 3% பொதுவான இருக்கும் கிருத்துவர் , 2% இஸ்லாமியர் , 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், 0.5% கத்தோலிக்க திருச்சபையினர். மக்கள் தொகையில் 39% ஆன்மீக மத நாட்டம் இல்லாதவர்களாக தங்களைக் கருதுபவர்கள், 13% நாத்திகர், 5.8% மற்ற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[14]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads