ஓம் நமோ நாராயணாய
ஒரு இந்து மந்திரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓம் நமோ நாராயணாய (சமசுகிருதம்: ॐ नमो नारायणाय, (பொருள்:பரம்பொருளான நாராயணனை வணங்குகிறேன்) இந்து சமயத்தில் என்பது வைணவர்களால் சிறப்பாக போற்றப்படும் மந்திரமாகும்.[1] இது எட்டெழுத்து மந்திரம் என்றும் திருவெட்டெழுத்து என்றும் அழைக்கப்படுகிறது. திருபாற்கடலில் யோக நித்திரையில் இருக்கும் விஷ்ணுவின் வடிவமான, காக்கும் கடவுள் நாராயணணை நோக்கி அழைக்கப்படும் ஒரு வேண்டுகோள்.[2]



Remove ads
தோற்றம்
சாம வேதத்தில், ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரத்தை வேத கால முனிவர்களால், ஞானம் பெற வந்தவர்களுக்கு கற்பித்ததாகக் கூறப்படுகிறது. இந்த மந்திரம் முனிவர்களின் தவம் மூலம் அதன் முக்கியத்துவத்தையும், பொருளையும் வெளிப்படுத்தியதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. பின்னர் இம்மந்திரத்தை சுய-உணர்தலுக்கான வழிமுறையாக அதை தேடுபவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.[3]
இலக்கியம்
ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரம் இந்து சமய இலக்கியங்களில், குறிப்பாக வேதம், வைணவ உபநிடதங்கள் மற்றும் புராணங்களில் பெரிதும் இடம் பெற்றுள்ளது. தெய்வத்திடமிருந்து இரட்சிப்பைப் பெறுவதற்காகவும், சடங்குகளை நிறைவேற்றுவதில் பக்தர்களால் இந்த மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.[4]
தாராசர் உபநிடதத்தில்[5] ஓம் என்பது என்றும் மாறாத மற்றும் நித்திய வஸ்துவான பிரம்மத்தை குறிக்கும், நமோ எனில் வணக்கம் செலுத்துதலைக் குறிக்கும், நாராயணாய என்பது "நாராயணன்" எனில் நாராயணனுக்கு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
நாராயண உபநிடதத்தில் ஓம் நமோ நாராயணா மந்திரத்தின் பெருமை விளக்கப்படுகிறது.[6][7]சிறுவன் பிரகலாதனின் ஓம் நமோ நாராயணா எனும் மந்திரத்தின் மகிமையால், பகவான் விஷ்ணு, நரசிம்ம அவதாரம் கொண்டு இரணியகசிபுவை கொன்று, சிறுவன் பிரகலாதனை காத்தார்.[8]
சமசுகிருத மொழியில் நாரா எனில் "தண்ணீரைக் குறிக்கிறது. மேலும் அனயா என்றால் தங்குமிடம். நாராயணா என்பது விஷ்ணுவின் அடைமொழியாகும். வான மண்டலத்தில் வைகுண்டம், பிரபஞ்ச நீர் மத்தியில் உள்ளது. எனவே ஓம் நமே நாராயணாய எனில் நாராயணன் எனும் கடவுளுக்கு அடிபணிதல், பிரமாண்டமான வடிவமைப்பில் ஒருவரின் இருப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் விஷ்ணுவின் பாதுகாப்பைத் தேடுவது ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு மந்திரமாகும்.[9]
முனிவரும், தத்துவஞானியுமான யாக்யவல்க்கியர் ஓம் நமோ நாராயணா எனும் மந்திரத்தை கீழ் கண்டவாறு பிரித்து விளக்குகிறார். [10]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads