ஓவியா
தென் இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓவியா (Oviya, பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையும் ஆவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகி்ல் அறிமுகமானார்.[2] இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 என்னும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு, திரிச்சூர் விமலா கல்லூரியில் தனது பட்டப்படிப்பினை முடித்தார்.
திரை வாழ்க்கை
இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம் ஆகும். வெற்றி படமான களவாணியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads