ஓ. பி. நய்யார்

இந்திய இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia

ஓ. பி. நய்யார்
Remove ads

ஓம்கார் பிரசாத் நய்யார் (Omkar Prasad Nayyar) (16 ஜனவரி 1926 - 28 ஜனவரி 2007) ஒரு இந்தியத் திரைப்படத்துறையைச் சேர்ந்த இசையமைப்பாளரும், பாடகர்-பாடலாசிரியரும், இசைத் தயாரிப்பாளரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இந்தித் திரையுலகின் மெல்லிசை இசை அமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். [1] நயா தௌர் படத்திற்காக 1958 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். நய்யார் பாடகிகளான கீதா தத், ஆஷா போஸ்லே, முகமது ரபி ஆகியோருடன் அதிகம் பணியாற்றினார். இருப்பினும் பாலிவுட்டின் முன்னணி பெண் பாடகி லதா மங்கேஷ்கருடன் ஒருபோதும் பணியாற்றவில்லை.

விரைவான உண்மைகள் ஓ. பி. நய்யார்O.P.Nayyar, பின்னணித் தகவல்கள் ...

பிரபல பாடகராக மாறுவதற்கு முன்பே கிஷோர் குமாரை அங்கீகரித்திருந்தார். பாப் ரே பாப் (1955), ராகினி (1958) போன்ற திரைப்படங்களில் கிஷோர் குமாரின் வெற்றிப் படங்களில் அடங்கும். ஆனால் இந்த உறவு நிலைக்கவில்லை.

நய்யாருக்கு, இந்துத்தானி இசையிலுள்ள பிலு இராகம் மிகவும் பிடித்த ராகம் ஆகும். இது கருநாடக இசையின் காபி இராகத்திற்கு சமமானது. இது இறுதியில் இவரது பெரும்பாலான பாடல்களுக்கு ஆதாரமாக இருந்தது.

Remove ads

இறப்பு

நய்யார் மாரடைப்பால் 2007 ஜனவரி 28 அன்று இறந்தார். நய்யாரின் மறைவைத் தொடர்ந்து லதா மங்கேஷ்கர், ஷர்மிளா தாகூர், மும்தாஜ், மகேசு பட், முகமது சாகுர் கயாம், சக்தி சமந்தா, சோனு நிகம், ரவீந்திர ஜெயின், அனு மாலிக், பி. ஆர். சோப்ரா மற்றும் சம்மி கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்திய அஞ்சல் துறையால் 2013 மே 3 அன்று ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இவரது பேத்தி நிகரிகா ரைசாடாவும் ஒரு நடிகை ஆவார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads