ககரியா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ககரியா (Khagaria) என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது பீகாரின் ககரியா மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். ககரியா முங்கர் பிரிவின் ஒரு பகுதியாகும். இது 25.5°N 86.48°E / 25.5; 86.48-இல் அமைந்துள்ளது. ககரியா சந்திப்பு தொடருந்து நிலையம் இந்த நகரத்திற்குச் சேவை செய்கிறது. இது முங்கேருக்கு வடக்கே சுமார் 25 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் ககரியா, நாடு ...
Remove ads

மக்கள்தொகை

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ககரியா நகரின் மக்கள்தொகை 49,406 ஆகும். இதில் 26,594 ஆண்கள் மற்றும் 22,812 பெண்கள் ஆவர். 0 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,273 ஆக இருந்தது. கல்வியறிவு விகிதம் 71.1% ஆகவும் இருந்தது. இதில் ஆண்களின் கல்வியறிவு 74.7 சதவிகிதமாகவும் பெண்களின் கல்வியறிவு 70 சதவிகிதமாகவும் இருந்தது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள்தொகை முறையே 3,782 மற்றும் 89 ஆக இருந்தது. 2011ஆம் ஆண்டில் ககரியாவில் 9123 குடும்பங்கள் இருந்தன.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads