ககான்
துருக்கிய-மங்கோலிய சமூகத்தின் பேரரசர் பட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
க கான் அல்லது ககான் (மொங்கோலியம்: хаан; மங்கோலிய எழுத்துமுறை: ᠬᠠᠭᠠᠨ, கயன்; [1]) என்பதற்கு மங்கோலிய மொழியில் பேரரசர் என்று பொருளாகும். சமமான பெண்பால் பட்டம் கதுன் ஆகும். கான்களின் கான் எனவும் இதனை மொழிபெயர்க்கலாம். இதற்கு மன்னாதி மன்னன் என்று பொருளாகும். மங்கோலியப் பேரரசின் பிரிவு காரணமாக, யுவான் வம்சத்தின் பேரரசர்கள் ககான் பட்டத்தைப் பயன்படுத்தினர். ககான் மற்றும் கான் துருக்கியில் பயன்படுத்தப்படும் பொதுவான துருக்கிய பெயர்கள் ஆகும்.
கிரேட் கான் (அல்லது கிரான்ட் கான்) என்பது மங்கோலிய மொழியின் எக்கே ககான் (பெரிய பேரரசர் அல்லது Их Хаан) என்பதன் மொழிபெயர்ப்பாகும்.
Remove ads
தோற்றம்
இப்பட்டமானது 283 மற்றும் 289க்கு இடைப்பட்ட ஒரு உரையில் முதன்முதலில் காணப்படுகிறது. சியான்பே தலைவன் டுயுஹுன் தனது இளைய தத்துச் சகோதரன் முரோங் ஹுயியிடம் இருந்து தப்ப முயற்சிக்கிறான். அவன் தனது பாதையை லியாவோடோங் தீபகற்பத்திலிருந்து ஓர்டோஸ் பாலைவனத்தின் பகுதிகளில் முடிக்கிறான். அப்போது பேசும்போது யினலோவ் என்கிற முரோங்கின் தளபதி ஒருவன் முரோங்கை கெஹான் (சீனம்: 可寒, பிறகு சீனம்: 可汗) என்கிறான். சில ஆதாரங்கள் 3ம் நூற்றாண்டில் சிங்கை ஏரியின் அருகில் வசித்த டுயுஹுனும் இப்பட்டத்தைப் பயன்படுத்தி இருக்கலாம் என்கின்றன.[2]
ரோவுரன் ககானேடு (330–555) மக்களே தங்களது பேரரசர்களுக்கு ககான் மற்றும் கான் ஆகிய பட்டங்களைப் பயன்படுத்திய முதல் மக்களாவர். அதற்கு முன்னர் சியோங்னுவின் சன்யு பட்டத்தை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். கிரவுசட் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் அது துருக்கிய மக்கள் என்று கருதுகின்றனர்.[3] ரோவுரன்கள் மங்கோலியர்களுக்கு மூதாதையர்களாகக் கருதப்படுகின்றனர்.[4][5][6]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads