கக்ராச்சாரி மாவட்டம்
வங்காளதேசத்தின் சிட்டகாங் கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கக்ராச்சாரி மாவட்டம் (அ) (Bengali: খাগড়াছড়ি தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சிட்டகாங் கோட்டத்தில் அமைந்துள்ளது. தென்கிழக்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கக்ராச்சாரி நகரம் ஆகும்.[1] இம்மாவட்டம் சிட்டகாங் மலைத் தொடர்களில் அமைந்த மாவட்டமாகும்.[2]இதன் உள்ளூர் பெயர் செங்மி என்று அழைக்கப்படுகிறது. கக்ராச்சாரி பள்ளத்தாக்கில் செங்கி ஆறு, கசலோங் ஆறு மற்றும் மைனி ஆறுகள் பாய்கிறது. இம்மாவட்டம் மலைகளால் சூழப்பட்டதாகும். இம்மாவட்டத்தின் முக்கிய பழங்குடி மலைவாழ் மக்கள் திரிபுரி மக்கள், சக்மா மக்கள், மர்மா மக்கள் ஆவார்.


Remove ads
மாவட்ட எல்லைகள்
சிட்டகாங் கோட்டத்தில் உள்ள கக்ராச்சாரி மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் திரிபுரா மாநிலமும், தெற்கில் சிட்டகாங் மாவட்டம் மற்றும் ரங்கமதி மாவட்டமும், கிழக்கில் ரங்கமதி மாவட்டமும், மேற்கில் சிட்டகாங் மாவட்டமும் இந்தியாவின் திரிபுரா மாநிலமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
சிட்டகாங் கோட்டத்தில் 2749.16 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கக்ராச்சாரி மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக கக்ராச்சாரி சதர், மொகல்சோரி, மணிக்சோரி, பஞ்சசோரி, லட்சுமிசோரி, திக்கினலா, மதிரங்கா, ராக்கோர் மற்றும் மெரூக் என ஒன்பது துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் மூன்று நகராட்சி மன்றங்களும், முப்பத்தி எட்டு கிராம ஒன்றியக் குழுக்களும், 120 வருவாய் கிராமங்களும், 1702 கிராமங்களும் உள்ளது. மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 4400; தொலைபேசி குறியிடு எண் 0371 ஆகும். இம்மாவட்டம் ஒரு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதியைக் கொண்டுள்ளது.
Remove ads
பொருளாதாரம்
இம்மாவட்டத்தில் கக்ராச்சாரி மலைப் பள்ளத்தாக்கில் செங்கி ஆறு, கசலோங் ஆறு மற்றும் மைனி ஆறுகள் பாய்கிறது. இங்கு தேயிலை, இஞ்சி, மஞ்சள், அன்னாசி, பப்பாளி, பலா, ஆரஞ்ச், எலுமிச்சம் பழம், வாழை முதலியன பயிரிடப்படுகிறது. இம்மலை மாவட்ட பழங்குடி மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செயல்படுகிறது. [3]
மக்கள் தொகையியல்
2749.16 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 6,13,917 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 3,13,793 ஆகவும், பெண்கள் 3,00,124 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆக உள்ளது. பாலின விகிதம் 105 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 223 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 46.1% ஆக உள்ளது.[4]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் வங்காளி மக்களுடன், பழங்குடி மலைவாழ் மக்கள் திரிபுரி மக்கள், சக்மா மக்கள், மர்மா மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் அலுவல் மொழியான வங்காள மொழியுடன், வட்டார மொழிகளான சக்மா, திரிபுரி, கோக்போரோக் மொழிகளும் பேசப்படுகிறது.
Remove ads
கல்வி
வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
கல்வி நிலையங்கள்
இம்மாவட்டத்தில் கக்ராச்சாரி அரசு கல்லூரி[5]கக்ராச்சாரி இராணுவப் பாசறை பொதுப் பள்ளி மற்றும் கல்லூரி, கக்ராச்சாரி மகளிர் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளது.
Remove ads
சமயங்கள் (1991)
1991-இல் கக்ராச்சாரி மாவட்டத்தில் இசுலாமியர்கள் - 34.45%, பௌத்தர்கள் - 48.51%, இந்துக்கள் - 16.69%, கிறித்தவர்கள் - 0.27% மற்றும் பிறர் - 0.08% ஆக இருந்தனர். சமய வழிபாட்டுத் தலங்களில் மசூதிகள் 2472, கோயில்கள் 170, பௌத்த விகாரங்கள் மற்றும் மடாலயங்கள் 937, தேவாலயங்கள் 4 இருந்தன churches.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads