கங்காவதார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கங்காவதார் என்பது 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் இந்துத் தொன்மவியல் திரைப்படமாகும். இப்படத்தை சி. கே. சச்சி என்று பிரபலமாக அறியப்பட்ட சி. கே. சதாசிவம் இயக்கினார்.[1] வெளிவந்த இத்திரைப்படமானது சென்னை சுந்தரம் சவுண்ட் ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் என். சி. வசந்தகோகிலம் நடித்தார்.[2][3]
Remove ads
கதை
கங்கை தேவி பூமிக்கு இறங்குவது தொடர்பான இந்து தொன்மவியில் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகப்பட்டது.
நடிப்பு
தி இந்து நாளிதழில் வெளியான இப்படத்தின் படத்தின் விமர்சனக் கட்டுரையிலிருந்து இந்தப் பட்டியல் எடுக்கப்பட்டது.[2]
|
|
Remove ads
தயாரிப்பு
இந்தப் படத்தை சென்னை அடையாறு சுந்தரம் சவுண்ட் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.[2]
பாடல்
இந்தப் படத்தில் என். சி. வசந்தகோகிலம் பாடிய பாடல்களின் பட்டியல்.
- "பாங்கனச்சோலை அலங்காரம்"
- "கலைவாணி அருள் புரிவாய்"
- "ஆனந்தம் அளவில்லா மிக ஆனந்தம்"
- "இதுவென்ன வேதனை"
- "ஜய ஜய புவனபதே பாலய ஜய கருணாஜலதே"
- "ஆனந்த மாயா வானுலகிதே"
- "காவின் மனோகரக் காட்சியின் மான்பே"
வரவேற்பு
திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை 2012 இல் எழுதுகையில், "படம் முக்கியமாக அதன் இசை மற்றும் என். சி. வசந்தகோகிலத்தின் பாடல்களால் மிகவும் நன்றாக இருந்தது." என குறிப்பிட்டார்[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads