கசானவித்துப் பேரரசு
துருக்கிய மம்லுக் வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் வம்சம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கசனவித்து வம்சம் (Ghaznavids) என்பது துருக்கிய மம்லூக் வம்சாவளியைச் சேர்ந்த பாரசீக முஸ்லிம் வம்சமாகும்.[7][b] [9] ஈரான், ஆப்கானித்தான், திரான்சோக்சியானாவின் பெரும்பகுதி, வடமேற்கு இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதி ஆகியவற்றை பொ.ச. 977 முதல் 1186 வரை ஆட்சி செய்தது. [10] குராசானிலுள்ள இந்து குஷ் மலைத்தொடருக்கு வடக்கே பால்கிலிருந்த சமனிட் பேரரசின் முன்னாள் தலைவராக இருந்த அவரது மாமனார் ஆல்ப் டிகின் இறந்த பிறகு கசுனி மாகாணத்தின் ஆட்சிக்கு வந்த சபுக்திகின் என்பவரால் வம்சம் நிறுவப்பட்டது.
வம்சம் நடு ஆசிய துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்தது என்றாலும், அது மொழி, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் முற்றிலும் பாரசீகமயமாக்கப்பட்டது. [c] [12] [d] [14] எனவே இது "பாரசீக வம்சமாகவே" கருதப்படுகிறது.[15]
சபுக்திகினின் மகன், கசினியின் மகுமூது சமனிட் பேரரசில் இருந்து சுதந்திரம் அறிவித்தார் [16] மேலும் கசனவித் பேரரசை கிழக்கில் ஆமூ தாரியா, சிந்து ஆறு மற்றும் இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கில் இரே மற்றும் அமாதான் வரை விரிவுபடுத்தினார். முதலாம் மசூத்தின் ஆட்சியின் கீழ், கசனவித்து வம்சம் தண்டநாகன் போருக்குப் பிறகு செல்யூக் வம்சத்திடம் அதன் மேற்குப் பகுதிகளின் மீதான கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது. இதன் விளைவாக நவீன ஆப்கானிஸ்தான், பாக்கித்தான் ( பஞ்சாப் மற்றும் பலுச்சிசுத்தானம் ) ஆகியவற்றிற்குள் அதன் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன. [17] [18] 1151 இல், சுல்தான் பஹ்ராம் ஷா கசினியை கோரி அரசர் அலா அல்-தின் ஹுசைனிடம் இழந்தார்.
Remove ads
குறிப்புகள்
- "உண்மையில், பத்தாம் நூற்றாண்டில் கசனவித்துகள் அரசு உருவானது முதல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கஜார்களின் வீழ்ச்சி வரை, ஈரானிய கலாச்சாரப் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகள் துருக்கிய மொழி பேசும் வம்சங்களால் ஆளப்பட்டன. அதே நேரத்தில், உத்தியோகபூர்வ மொழி பாரசீக மொழியாகும். அரசவை இலக்கியம் பாரசீக மொழியில் இருந்தது. மேலும் பெரும்பாலான அரசர்கள், அமைச்சர்கள் மற்றும் மாண்டரின்கள் பாரசீக மொழி பேசுபவர்களாக உயர்ந்த கற்றல் மற்றும் திறன் கொண்டவர்களாக இர்டுந்தனர்."[3]
Remove ads
சான்றுகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads