கசானித்து இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

கசானித்து இராச்சியம்
Remove ads

கசானித்துகள் (Ghassanids), தெற்கு அரேபியாவில் வாழ்ந்த அரேபிய இனக்குழுவினர் ஆவார். கசானித்துகள், கிபி 3ஆம் நூற்றாண்டில் லெவண்ட் பகுதியில் குடியேறி, பைசாந்தியப் பேரரசின் கீழ் சிற்றரசை நிறுவினர். [2]எலனியக் காலத்தில் கசானித்துகள் உள்ளுர் சால்டிய கிறித்தவர்களுடன் கலந்து கிறித்தவ சமயத்தைப் பின்பற்றினர்.[3] ரோம-பாரசீகப் போர்களில் கசானித்துகள், பைசாந்தியர்களுக்கு ஆதரவாக, சாசானியப் பேரரசை எதிர்த்துப் போரிட்டனர்.[4]

விரைவான உண்மைகள் கசானித்துகள்الغساسنة‎‎, நிலை ...
Thumb
பண்டைய அண்மை கிழக்கில் கிபி 565ல் கசானித்து இராச்சியம் மற்றும் அருகமைந்த இராச்சியங்களும், பேரரசுகளும்
கசானித்து இராச்சியம் (கிபி 220–638)
Thumb
கசானித்துகளின் போர்க் கொடியில் புனித செர்கியூசின் படம்
Thumb
லெவண்ட் பகுதியில் கசானித்து இராச்சியத்தின் வரைபடம்

ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆட்சி செய்த கசானித்துகள், 638ஆம் ஆண்டில் ராசிதீன் கலீபாக்களால் வீழ்த்தப்பட்டனர். இதனால் கசானித்துகளில் சில குழுவினர் இசுலாமிய சமயத்தில் சேர்ந்தனர். பெரும்பாலான கசானித்துகள் மெல்கைட்டு மற்றும் சிரியாக் கிறிஸ்தவர்களைப் பின்பற்றினர். இம்மக்கள் தற்கால சிரியா, ஜோர்டான், இஸ்ரேல், பாலத்தீனம் மற்றும் லெபனான் நாடுகளில் வாழ்கின்றனர்.[2]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads