கசின் ஆனந்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கசின் ஆனந்தம் [பிறப்பு: 1948] ஒரு சௌராஷ்டிர மொழி அறிஞர். இவரது குடும்பப் பெயர் கசின். இவரது முன்னோர்கள் காசியில் பலகாலம் வசித்து வந்ததால், இவரது முன்னோர்களின் குடும்பப்பெயர் ”கசின்” என்று காரணப்பெயராக மாறிவிட்டது.
இளமை வாழ்க்கை
கசின் ஆனந்தம், மதுரையில் பட்டுநெசவுத் தொழில் புரியும் சௌராட்டிரர் குடும்பத்தில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி முடித்த கசின் ஆனந்தம் வறுமை காரணமாக குலத்தொழிலான பட்டுநெசவுத்தொழில் புரிந்தார்.
தாய்மொழியான சௌராட்டிர மொழியில் ஒவ்வொரு சௌராட்டிர மக்களும் புலமை பெற வேண்டும் என்னும் கொள்கை உடைய இவர், சௌராட்டிர மொழி அறிஞர் “விப்ரபந்து” கு. வெ. பத்மனாபய்யர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கசின் ஆனந்தம் சௌராட்டிர மொழியை, சௌராட்டிர மொழி ஆசிரியர். ஓபுளா. கே. இராமானந்தம் பி.ஏ.,பி.டி., அவர்களிடம் சௌராட்டிர மொழியை முழமையாக பயின்று முடித்தார்.
Remove ads
இலக்கு
மூன்று இலட்சம் சௌராட்டிர மக்கள் வாழும் மதுரை மாவட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் சௌராட்டிர மொழியை எழுதப் படிக்க தெரிந்தவர்களாக உள்ளனர். எனவே பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள சௌராட்டிர மொழியை, சௌராட்டிர சமூக மக்கள் அனைவரும் சௌராட்டிர மொழியை எழுதப் படிக்க தெரிந்து கொண்டால் மட்டுமே சௌராட்டிர மொழியில் கதைகள், நாவல்கள், இலக்கியங்கள்,காவியங்கள், புராணங்கள் படிக்க முடியும் என்று கருதி தமது தாய் மொழியில் மகாபாராதம காவியம் எழுத முடிவு செய்தார்.
Remove ads
சாதனைகள்
சௌராட்டிர மொழியில் பல கவிதைகள், கதைகள் படைத்துள்ளார். இவர் ஒபுளா. ஒ. கே. இராமானந்தம் அவர்களிடம் சௌராட்டிர மொழியை கற்றார். சௌராட்டிர மொழியில் இராமாயண இதிகாசம் உரைநடை வடிவிலும், செய்யுள் வடிவிலும், கவிதை வடிவிலும் நான்கு இராமாயணம் காவியம் உள்ளது. ஆனால் ஒரு மகாபாரத காவியம் கூட இல்லை. அருணாசலக் கவிராயர், தமிழில் கவிதை வடிவில் பாடிய இராமாயணத்தை வர்ண மெட்டுகளின்படி வேங்கட சூரி சுவாமிகள் சௌராட்டிர மொழியில் சங்கீத இராமயணத்தை பாடியுள்ளதால் கசின் ஆனந்தம், வியாசரின் மகாபாரத காவியத்தை சௌராட்டிர மொழியில் புதுக்கவிதை வடிவில் மொழிபெயர்க்க முடிவு செய்தார்.
சமய இலக்கிய தமிழறிஞர் நாஞ்சில் கிருட்டிணப்பிரியன், கசின் ஆனந்தத்தின் முயற்சியை பாராட்டி சௌராட்டிர மொழியில் மகாபாரதம் எழுதத் தேவையான உதவிகள் செய்ததுடன் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். அவரது குடும்பத்தாரும் அவரின் முயற்சியில் பங்கு கொண்டனர். வறுமையில் வாடிய கசின் ஆனந்தம் பகலில் நெசவுத் தொழில் செய்தும், இரவில் சௌராட்டிர மொழியில் மகாபாரதம் எழுதுவதுமாக இருந்தார்.
கசின் ஆனந்தம் சௌராட்டிர மொழியில் மகாபாரத காவியத்தை எழுதுவதற்கு சௌராட்டிர மொழி அறிஞர் ஓபுளா. எஸ். சுப்பிரமணியன் தேவையான உதவிகள் செய்தார். சௌராட்டிர மொழியில் மிகப்புலமை பெற்றிருந்தும் வறுமையின் காரணமாக சௌராட்டிர மொழியில் தான் எழுதிய குரு வம்சத்தில் பிறந்த பாண்டவர்களின் கதையை பாண்டவுன் கெதொ எனும் தலைப்பில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புதுக்கவிதை வடிவில் சௌராட்டிர மொழியில் அமைந்த மகாபாரத காவியத்தை வெளிக்கொணர, தேவையான பணம் இல்லாததால் அதனை வெளியிட எட்டு ஆண்டு காலம் தாமதம் ஆயிற்று.
பின்பு பலவகைகளில் நான்கு இலட்சம் ரூபாய் திரட்டி ரூபாய் 700 மதிப்புள்ள பாண்டவுன் கெதொ எனும் மகாபாரத காவியத்தை சௌராட்டிர மொழியில் 500 பிரதிகள் அச்சடித்து ஏப்ரல் 28, 2013ல் மதுரை ”நடனகோபால நாயகி மந்திர்” அரங்கத்தில் வெளிடப்பட்டது. சௌராட்டிர மொழியில் மகாபாரதம் என்ற காப்பியம் இல்லாத குறையை நீக்கியவர் கசின் ஆனந்தம்.
ஆதாரம்
- Saurashtram gets its first Mahabaratham, V. Devanathan. தி டைம்ஸ் ஆப் இந்தியா, மதுரை/திருச்சி பதிப்பு, வெள்ளிக்கிழமை, மே 10, 2013 [தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
- சௌராடடிரர் வரலாறு, கே. ஆர். சேதுராமன்
- சௌராட்டிரர் வரலாறு, ஒலி வடிவில்,
- சௌராட்டிரர் சமூக வரலாறு, பண்பாடு, மொழி, வாழ்ந்த இடங்கள் பற்றி படிக்க
- சௌராட்டிர மொழி பயிற்சிக்கு பரணிடப்பட்டது 2018-11-23 at the வந்தவழி இயந்திரம்
- History of Saurashtrians of Tamilnadu பரணிடப்பட்டது 2013-07-28 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads