கஞ்சஞ்சங்கா மலை
பூமியில் 3வது மிக உயரமான மலை, நேபாளம் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
கஞ்சஞ்சங்கா (Kangchenjunga, நேப்பாளம்: कञ्चनजङ्घा Kanchanjaŋghā) உலகிலுள்ள மூன்றாவது உயரமான மலையாகும். இமயமலைத்தொடரில் மேற்கில் தமோர் ஆற்றையும் வடக்கில் லோனக் ஆற்றையும் ஜொங்ஸொங் மலையுச்சியையும் கிழக்கில் டீஸ்டா ஆற்றையும் எல்லைகளாகக்[3] கொண்டு இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ள இதன் மலையுச்சி கடல் மட்டத்திலிருந்து 8,586 மீட்டரில் உள்ளது. இது நேபாளத்தின் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.[4]
கஞ்சன் ஜங்கா என்பது வட்டார வழக்கில் உயர் பனியின் ஐந்து புதையல்கள் என்று பொருள்படும்.[5] கஞ்சஞ்சங்காவில் மொத்தம் ஐந்து கொடுமுடிகள் (சிகரங்கள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.
1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads