கஞ்சாநகரம்

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கஞ்சாநகரம் தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திலுள்ள கிராமம்[4]. மிகப்பழமையான புராண வரலாற்றைத் தன்னகத்தேக் கொண்ட ஊர். இந்த ஊருடன் சேர்த்து அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோயில், பெருமங்கலம், ஆனந்ததாண்டவபுரம், திருநன்றியூர் ஆகிய ஐந்து ஊர்களையும் ஆண்ட சோழ மன்னனின் குறுநிலத் தலைவன் மானக்கஞ்சாரநாயனார் ஆண்ட இடமாதலால் மானக்கஞ்சாரபுரம்-கஞ்சாரநாயனார் புரம் - கஞ்சாநகரம் என மருவிப் பெயர் பெற்றதாகச் செவிவழிச் செய்தி வழங்கி வருகிறது. இங்குள்ள காத்ர சுந்தரேசுவரர் கோயில் மயிலாடுதுறை (முன்னர் நாகப்பட்டின) மாவட்டத்திலுள்ள முக்கியமான சிவாலயங்களில் ஒன்று. 63 நாயன்மார்களில் மானகஞ்சார நாயனார் பிறந்து முக்தி அடைந்த தலம் இது[5].

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads