கஞ்சிரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கஞ்சிரா (Kanjira) சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இவ்வாத்தியம் பஜனைகளிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது
தாடப்பலகை, கனகதப்பட்டை, டேப் தாஸ்ரிதப்பட்டை முதலியனவும் கஞ்சிரா வகையில் சேரும்.
டேப் எனும் வாத்தியக் கருவி கஞ்சிராவுக்கு முன்னோடியாக இருந்தது. அது கஞ்சிராவைவிட அளவில் பெரியதாக இருக்கும். கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கருநாடக இசைக் கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் மாமுண்டியா பிள்ளை ஆவார்[1].
கஞ்சிரா உடும்புத் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த இசைக்கருவியானது வட்டவடிவ மரச்சட்டத்தில் இறுக்கமாக ஒட்டபட்டிருப்பதால் அதிலிருந்து வெளிப்படுத் நாதம் உச்ச ஸ்தாயில்தான் இருக்கும். இதை மட்டப்படுத்த வாத்தியத்தின் பின்பக்கத் தோலில் நீரைத் தடவி அடர்த்தியான ஒலியை வரவழைப்பர். ஒரு கையால் வாசிக்கப்படும் இதில் சுருதியை சேர்க்க முடியாது.[2]
தாள இசைக்கருவியாகிய கஞ்சிரா வாசிப்பில் மிகச்சிறந்த கலைஞர்கள் சிலர்:
- புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளை (கஞ்சிராவை உருவாக்கி கருநாடக இசை அரங்குகளில் அறிமுகப்படுத்தியவர்) [சான்று தேவை]
- புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை
- பழனி சுப்பிரமணிய பிள்ளை
- புதுக்கோட்டை சுவாமிநாத பிள்ளை
- வி. நாகராஜன்
- ஜி. ஹரிசங்கர்
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads